Categories: அசைவம்

Erode Chicken Chinthamani Recipe In Tamil | ஈரோடு சிக்கன் சிந்தாமணி

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான ஈரோடு சிக்கன் சிந்தாமணி ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

இன்று உங்கள் வீட்டில் சிக்கன் வாங்கியுள்ளீர்களா? அந்த சிக்கனைக் கொண்டு சற்று வித்தியாசமான ரெசிபியை செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால் அந்த சிக்கனைக் கொண்டு ஒரு கொங்குநாடு ரெசிபியை இன்று செய்யுங்கள். அது தான் சிக்கன் சிந்தாமணி. இது ஒரு அற்புதமான சைடு டிஷ். இது சாதத்துடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். அதோடு இதை செய்வது மிகவும் சுலபம்.

தேவையான பொருட்கள்:

* சிக்கன் – 500 கிராம்

* நல்லெண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்

* கறிவேப்பிலை – சிறிது

* சின்ன வெங்காயம் – 1 கப் (பொடியாக நறுக்கியது)

* வரமிளகாய் – 12

* இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்

* துருவிய தேங்காய் – 1/4 கப்

* மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்

* மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

செய்முறை:

* முதலில் சிக்கனை நன்கு கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், கறிவேப்பிலை மற்றும் வரமிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.

* பின்பு அதில் வெங்காயத்தைப் போட்டு, சிறிது உப்பு தூவி நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.

* அடுத்து அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட்டை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, பின் மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து சில நிமிடங்கள் வதக்க வேண்டும்.

* பிறகு கழுவி வைத்துள்ள சிக்கனை சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கி, 1/4 கப் நீரை ஊற்றி, வாணலியை மூடி 30 நிமிடம் குறைவான தீயில் சிக்கனை வேக வைக்க வேண்டும்.

* சிக்கன் நன்கு வெந்ததும், அதில் தேங்காயைத் தூவி நன்கு கிளறி, ஒரு நிமிடம் வேக வைத்து இறக்கினால், ஈரோடு சிக்கன் சிந்தாமணி தயார்.

Image Courtesy: yummyoyummy

இந்த பதிவின் மூலமாக ஈரோடு சிக்கன் சிந்தாமணி எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி ஈரோடு சிக்கன் சிந்தாமணி ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

admin

Recent Posts

Pattukkottai Nadiamman Temple Therottam LIVE நாடியம்மன் கோயில் தேரோட்டம்

Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…

2 years ago

Ramaswamy Venkataraman | இரா வெங்கட்ராமன் முன்னாள் குடியரசுத் தலைவர் | ராஜாமடம்

இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…

2 years ago

அன்பு ஒன்றுதான் அனாதை இல்லை | அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் | Social Activist Balamurugan

அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…

2 years ago

முதல் சுயமரியாதைப் போராளி பட்டுக்கோட்டை அஞ்சா நெஞ்சன் அழகிரிசாமி | Pattukkottai Alagiri

Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…

2 years ago

மனோரா கோட்டை பட்டுக்கோட்டை | Manora Fort Pattukkottai

பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…

2 years ago