நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான ருசியான… இளநீர் பாயாசம் ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…
பாயாசம் பலரும் விரும்பி சாப்பிடும் ஒன்று. பாயாசத்தில் பல வெரைட்டிகள் உள்ளன. அதில் ஒன்று இளநீர் பாயாசம். இந்த பாயாசம் செய்வது மிகவும் எளிது. அதே சமயம் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் சுவையானதாக இருக்கும். உங்கள் வீட்டிற்கு விருந்தினர்கள் வந்திருந்தால், அவர்களுக்கு இதை செய்து கொடுத்தால் அவர்களின் பாராட்டைப் பெறலாம்.
தேவையான பொருட்கள்:
* கொழுப்பு நிறைந்த பால் – 1 1/2 கப்
* கெட்டியான தேங்காய் பால் – 1/2 கப்
* இளநீர் கூழ் – 1/2 கப்
* சர்க்கரை – 1 டேபிள் பூன்
* கண்டென்ஸ்டு மில்க் – 2 டேபிள் பூன்
* ஏலக்காய் பொடி – சிறிது
அரைப்பதற்கு…
* இளநீர் கூழ் – 1/2 கப்
* இளநீர் – 3/4 கப்
(2 இளநீர் இந்த ரெசிபிக்கு சரியாக இருக்கும்.)
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் இளநீர் கூழ் மற்றும் இளநீரை ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் பாலை நன்கு 5 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க வைத்து, அதில் சர்க்கரை மற்றும் கண்டென்ஸ்டு மில்க் சேர்த்து, ஓரளவு கெட்டியாகவும், க்ரீமியாகவும் மாறும் வரை நன்கு கிளறி இறக்கி, குளிர வைக்கவும்.
* பின்பு அதில் அரைத்த இளநீர் கூழை உற்றி, அத்துடன் தேங்காய் பால் மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி பரிமாறினால், சுவையான இளநீர் பாயாசம் தயார்.
குறிப்பு:
* இளநீர் பாயாசம் செய்வதற்கு, இளநீரின் உள்ளே உள்ள பகுதி மென்மையாக கூழ் போன்று இருக்க வேண்டும். கெட்டியாக தேங்காய் போன்று இருக்கக்கூடாது.
*
* இளநீர் பாயாசத்தின் சுவை அதிகரித்திருக்க வேண்டுமானால், பயன்படுத்தும் பால் கொழுப்பு நிறைந்ததாக இருக்க வேண்டும்.
* கண்டென்ஸ்டு மில்க் இல்லாவிட்டால் பிரச்சனை இல்லை. ஆனால் இதை சேர்த்தால் சுவை இன்னும் அற்புதமாக இருக்கும்.
Image Courtesy: sharmispassions
இந்த பதிவின் மூலமாக ருசியான… இளநீர் பாயாசம் எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி ருசியான… இளநீர் பாயாசம் ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .