நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான முட்டை ப்ரை ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…
தினமும் ஒரு முட்டை சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது. அதுவும் முட்டையை வேக வைத்து சாப்பிடுவது தான் சிறந்த பலனைத் தரும். உங்கள் வீட்டில் உள்ளோர் வேக வைத்த முட்டையை சாப்பிட மறுக்கிறார்களா? அவர்களை வேக வைத்த முட்டையை சாப்பிட வைக்க வேண்டுமா? அப்படியானால் முட்டை ப்ரை செய்து கொடுங்கள். இந்த முட்டை ப்ரை ரச சாதத்துடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். வேண்டுமானால், இந்த முட்டை ப்ரையை மாலை வேளையில் கூட குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கலாம்.
9 வருடமாக அவதிப்படும் சிறுமி.. ஆபரேஷன் செய்ய உதவுங்கள்!
தேவையான பொருட்கள்:
* முட்டை – 3
* மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
* இஞ்சி பூண்டு விழுது – 1/4 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
* உப்பு – 1/4 டீஸ்பூன்
* எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் முட்டையை வேக வைத்துக் கொள்ள வேண்டும். பின் அதை குளிர வைத்து, ஓட்டை நீக்கிவிட்டு, முட்டை நீளவாக்கில் இரண்டாக வெட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு சிறிய பௌலில் மிளகாள் தூள், இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து ஒரு டீஸ்பூன் நீர் ஊற்றி பேஸ்ட் போல் கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதை முட்டையின் இருபுறங்களிலும் தடவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு அகலமான பேனை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, 3-4 முட்டை துண்டுகளைப் போட்டு மிதமான தீயில் இருபுறமும் வேக வைத்து எடுக்க வேண்டும். இதேப் போல் அனைத்து முட்டை துண்டுகளையும் வேக வைத்து எடுத்தால், சுவையான மற்றும் எளிமையான முட்டை ப்ரை ரெடி…
குறிப்பு:
*
* முட்டையை மிதமான தீயில் வேக வையுங்கள். இல்லாவிட்டால், எளிதில் கருகிவிடும்.
* மேலே குறிப்பிட்டுள்ள மிளகாய் தூளின் அளவு மிதமான காரத்தை அளிக்கும்.
Image Courtesy: naliniscooking
இந்த பதிவின் மூலமாக முட்டை ப்ரை எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி முட்டை ப்ரை ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .