நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான சிம்பிளான… சிக்கன் கிரேவி ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…
அப்படியானால் கீழே கொடுக்கப்பட்டுள்ள சிக்கன் கிரேவியை செய்யுங்கள். இது நிச்சயம் உங்கள் வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். முக்கியமாக இது சாதத்திற்கு மட்டுமின்றி, சப்பாத்தி, பூரி, தோசை என்று அனைத்திற்கும் அட்டகாசமாக இருக்கும். வாருங்கள் அதன் செய்முறையைக் காண்போம்.
தேவையான பொருட்கள்:
* சிக்கன் – 150 கிராம்
* பெரிய வெங்காயம் – 1/4 கப் (நறுக்கியது)
* தக்காளி – 1 (நறுக்கியது)
* மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
* மல்லித் தூள் – 1 டீஸ்பூன்
* கரம் மசாலா – 1/4 டீஸ்பூன்
* கொத்தமல்லி – சிறிது
* தண்ணீர் – 3/4 கப்
* உப்பு – சுவைக்கேற்ப
அரைப்பதற்கு…
* தக்காளி – 1 (நறுக்கியது)
* பெரிய வெங்காயம் – 1 (நறுக்கியது)
* பூண்டு – 4 பற்கள்
* இஞ்சி – 1/2 இன்ச் துண்டு
* சோம்பு – 1/2 டீஸ்பூன்
தாளிப்பதற்கு…
* எண்ணெய் – 1/2 டேபிள் ஸ்பூன்
* பட்டை – 1/4 இன்ச்
* ஏலக்காய் – 2
* சோம்பு – 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை – சிறிது
* வரமிளகாய் – 1
* கல்பாசி – 1/2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக 2-3 முறை கழுவிக் கொள்ள வேண்டும். இறுதியாக கழுவும் போது, மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி கழுவ வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் வெங்காயம், தக்காளியை சேர்த்து 2 நிமிடம் நன்கு பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* அடுத்து மசாலா பொடிகளான மஞ்சள் தூள், மல்லித் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து ஒரு நிமிடம் வதக்க வேண்டும்.
* பிறகு அரைத்து வைத்துள்ள தக்காளி விழுதை சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை குறைவான தீயில் 5 நிமிடம் வதக்க வேண்டும். இப்போது சிக்கனை சேர்த்து 5 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின் 3/4-1 கப் வரை நீரை ஊற்றி, குக்கரை மூடி 4-5 விசில் விட்டு இறக்கி, விசில் போனதும் குக்கரைத் திறந்து, மீண்டும் அடுப்பில் வைத்து 5 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க வைத்து, மேலே கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான சிக்கன் கிரேவி தயார்.
Image Courtesy: sharmispassions
இந்த பதிவின் மூலமாக சிம்பிளான… சிக்கன் கிரேவி எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி சிம்பிளான… சிக்கன் கிரேவி ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை Agricultural Technology Management Agency ATMA : அட்மா திட்டம் தமிழ்நாட்டில் 2005-06 ஆம்…
Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…
இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…
அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…
Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…
பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…