செய்திகள்

கல்விக் கடன் ரத்து, மதுவிலக்கு, விவசாய கடன் ரத்து – திமுக தேர்தல் அறிக்கை

திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கல்விக் கடன் ரத்து செய்யப்படும் என்றும் மதுவிலக்கை அமல்படுத்த சட்டம் என்றும் அண்ணா பெயரில் உணவகம் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கடந்த 2006 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் கதநாயகனாக திகழ்ந்தது திமுக தேர்தல் அறிக்கை. அதேபோல் வரும் சட்டசபை தேர்தலில் திமுக தேர்தல் அறிக்கையில் என்ன அம்சங்கள் இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில் இன்று மாலை சென்னை அறிவாலயத்தில் திமுக தலைவர் கருணாநிதி தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

திமுக தேர்தல் அறிக்கை சிறப்புஅம்சங்கள்…

  • 25 ஆண்டுகள் பணி முடித்த அரசு ஊழியர்கள்,ஆசிரியர்களுக்கு ஊக்கத்தொகை
  • 54 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலியான. ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்
  • மாவட்டந்தோறும் வேலை வாய்ப்பு முகாம்
  • தாலிக்கு 4 கிராம் தங்கம் தொடரும்
  • சிறு-குறு விவசாயக்கடன் தள்ளுபடி செய்யப்படும்
  • 100 நாள் வேலை திட்டத்தை 150 நாட்களாக உயர்த்தப்படும்
  • டாஸ்மாக் நிறுவனம் கலைக்கப்படும்
  • நெல், கரும்புக்கான கொள்முதல் விலையை உயர்த்தப்படும்
  • மகளிருக்கு 9 மாதம் பேருகால விடுமுறை
  • பாரம்பரிய ஏரிகளை தூர்வார ரூ.10 ஆயிரம் கோடி
  • வெள்ள சேதத்தை தடுக்க ரூ.5 ஆயிரம் கோடி
  • மதுரை – தூத்துக்குடி சாலையோரத்தில் தொழிற்சாலைகள் கட்டப்படும்
  • கச்சதீவை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்
  • அரசுத்துறையில் காலியாக உள்ள 3 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும்
  • மதுவிலக்கை ஈடுகட்ட புதிய திட்டங்கள் தீட்டப்படும்
  • அனைத்து விவசாயிகளுக்கும் மும்முனை மின்சாரம்
  • மீனவர்களுக்கு 5 லட்சம் வீடுகள்
  • மீன்பிடி தடைக்கால நிவாரணம் ரூ.5 ஆயிரம்
  • விசைத்தறிகளுக்கு 750 யுனிட் இலவச மின்சாரம்
  • அரசு பள்ளிகளில் காலியாக உள்ள சுமார் 54 ஆயிரம் இடங்கள் நிரப்பப்படும்
  • நம்மாழ்வார் பெயரில் இயற்கை வேளாண் ஆராய்ச்சி மையம்
  • மத்திய அரசு அலுவலகங்களில் தமிழ் ஆட்சி மொழி
  • ஆவின் பால் லிட்டருக்கு ரூ 7 குறைக்கப்படும்
  • கிருஷ்ணகிரியில் தோட்டப் பல்கலை., கட்டப்படும்
  • ஒரு லட்சம் பட்டதாரிகளுக்கு சுய தொழில் தொடங்க ரூ.1 லட்சம்
  • லோக் ஆயுக்தா சட்டம் கொண்டுவரப்படும்
  • சேவை உரிமை சட்டம் கொண்டு வரப்படும்
  • நெல்லுக்கான ஆதாரவிலை ரூ.2500; கரும்பு டன்னுக்கு ரூ.3,500
  • மஞ்சள், மரவள்ளிகிழங்கு, மிளகாய், தேயிலை, பருப்பு, எண்ணெய் வித்துகளுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை
  • கைத்தறி நெசவாளர்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம்
  • விவசாயிகளுக்கு வேட்டி சேலைகளுக்கு ரூ.500 பொங்கல் பரிசு
  • நூறு நாள் வேலை திட்டத்தில் 50 நாட்களாக உயர்த்தப்பட்டு 50 நாளை விவசாயப் பணிகளுக்கு பயன்படுத்தப்படும்
  • நீர்ப்பாசன துறைக்கு தனி அமைச்சகம்; தனி அமைச்சர்; அப்போதுதான் சென்னையை வெள்ளபாதிப்பில் இருந்து காப்பாற்ற முடியும்
  • ரூ.2000 கோடியில் 200 தடுப்பணைகள்
  • நெசவாளர் வீடுகட்ட ரூ.3 லட்சம் மானியம்
  • பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து ஆவின் நிறுவனமே பாலை கொள்முதல் செய்யும்
  • காஞ்சிபுரத்தில் பட்டுப்பூங்கா
  • ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கு 15 நாட்களில் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும்
  • முதல் தலைமுறை ஏழை மாணவர்களுக்கு சாதி வேறுபாடின்றி இலவச தொழிற்கல்வி
  • பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டு கொண்டுவரப்படும்
  • ஆட்டோ வாங்க ரூ.10,000 மானியம்
  • சென்னை – ஓசூர்; மதுரை – தூத்துக்குடி நெடுஞ்சாலையோரம் நிறைய தொழிற்சாலைகள்
  • ஓவியம், இசை, உடற்கல்வி ஆசிரியர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவர்
  • மீண்டும் வரும் முன் காப்போம் திட்டம்
  • அறிஞர் அண்ணா உணவகம், ஆட்டோ வாங்க ரூ.10000/- மானியம், நெல்லுக்கு ஆதார விலை.
admin

Recent Posts

Pattukkottai Nadiamman Temple Therottam LIVE நாடியம்மன் கோயில் தேரோட்டம்

Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…

2 years ago

Ramaswamy Venkataraman | இரா வெங்கட்ராமன் முன்னாள் குடியரசுத் தலைவர் | ராஜாமடம்

இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…

2 years ago

அன்பு ஒன்றுதான் அனாதை இல்லை | அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் | Social Activist Balamurugan

அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…

2 years ago

முதல் சுயமரியாதைப் போராளி பட்டுக்கோட்டை அஞ்சா நெஞ்சன் அழகிரிசாமி | Pattukkottai Alagiri

Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…

2 years ago

மனோரா கோட்டை பட்டுக்கோட்டை | Manora Fort Pattukkottai

பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…

2 years ago