Categories: சைவம்

Diwali Special: Rasmalai Recipe In Tamil | தீபாவளி ஸ்பெஷல் ரசமலாய் ரெசிபி

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான தீபாவளி ஸ்பெஷல் ரசமலாய் ரெசிபி (Rasmalai Recipe) செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

தீபாவளி பண்டிகை நெங்கிக் கொண்டிருக்கிறது. அனைவரும் வீட்டில் பலகாரங்களை செய்ய திட்டம் போட்டுக் கொண்டிருப்பார்கள். பொதுவாக தீபாவளி பலகாரம் என்றாலே நினைவிற்கு வருவது, முறுக்கு, அதிரசம், சீடை, மைசூர்பாக் போன்றவை தான். ஆனால் இந்த வருட தீபாவளிக்கு நீங்கள் சற்று வித்தியாசமான ரெசிபிக்களை செய்ய விரும்பினால், உங்கள் தீபாவளி பலகாரங்களின் பட்டியலில் ரசமலாய் ரெசிபியை சேர்த்துக் கொள்ளுங்கள். இது ஒரு வட இந்திய ரெசிபியாக இருந்தாலும், இதன் சுவையால் உலகெங்கிலும் அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு சுவையான ஸ்வீட்டாக உள்ளது.

எனவே இந்த தீபாவளிக்கு உங்கள் வீட்டில் ரசமலாய் செய்ய விரும்பினால், அதன் எளிமையான செய்முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து உங்கள் வீட்டில் உள்ளோரை அசத்துங்கள். முக்கியமாக உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ள மறவாதீர்கள்.

தேவையான பொருட்கள்:

ரசகுல்லா செய்ய…

* பால் – 1 லிட்டர்

* எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்

ரசமலாய் செய்ய…

* பால் – 3 கப்

* கண்டென்ஸ்டு மில்க் – 3 டேபிள் ஸ்பூன்

* நெய் – 1 டீஸ்பூன்

* சர்க்கரை – 1/2 கப்

* நறுக்கிய நட்ஸ் (பாதாம், பிஸ்தா, முந்திரி) – 3 டேபிள் ஸ்பூன்

* குங்குமப்பூ – 3 சிட்டிகை

* ஏலக்காய் பொடி – 1/2 டீஸ்பூன் (விருப்பமிருந்தால்)

Rasmalai Recipe செய்முறை:

* முதலில் ரசகுல்லா செய்ய ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி, நன்கு சுண்ட காய்ச்சவும். பின் அதில் எலுமிச்சை சாற்றினை சேர்க்கவும். இப்போது பால் திரிந்து போயிருக்கும்.

* இந்நிலையில் அந்த திரிந்த பாலை ஒரு துணியில் கட்டி, நீரை வடித்துக் கொள்ள வேண்டும். 10 நிமிடத்திற்கு பின், அந்த பன்னீரை சிறு உருண்டைகளாக உருட்டி தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.

* பின்பு ஒரு பாத்திரத்தில் நெய் தடவி, அதில் பால் மற்றும் கண்டென்ஸ்ட் மில்க் ஊற்றி கொதிக்க விடவும். பால் கொதிக்க ஆரம்பித்ததும், மிதமான தீயில் பாலை கொதிக்க விடவும்.

* பால் கெட்டியாகி, பாதியாக குறைவதற்குள், ஒரு சிறிது கிண்ணத்தில் 2 டேபிள் ஸ்பூன் பாலை எடுத்து, அதில் குங்குமப்பூ சேர்த்து கரைய விடுங்கள்.

* பால் பாதியாக குறைந்ததும், அதில் கரைத்து வைத்துள்ள குங்குமப்பூ பால் சேர்த்து கிளறி விடுங்கள். பின் சர்க்கரை சேர்த்து தொடர்ந்து கிளறிவிடுங்கள்.

* பின்பு நெருப்பை குறைத்து, இன்னும் பாலை சுண்ட விடுங்கள். அதற்குள் ஒரு வாணலியில் நெய் ஊற்றி, நட்ஸ்களை போட்டு ப்ரை செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

* பால் ஓரளவு சுண்டியதும், அதில் ப்ரை செய்து வைத்துள்ள நட்ஸ் மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி விடுங்கள்.

* இப்போது தயாரித்து வைத்துள்ள ரசாகுல்லாக்களைப் போட்டு, குறைவான தீயில் 5 நிமிடம் வேக வைத்து, அடுப்பை அணைத்துவிட்டு, நன்கு குளிர விடுங்கள். இப்போது சுவையான ரசமலாய் தயார்!

குறிப்பு:

* குங்குமப்பூவை அதிகமாக சேர்த்துவிட வேண்டாம். இல்லாவிட்டால், அது ரசமலாய் சுவையையே கெடுத்துவிடும்.

* கண்டென்ஸ்டு மில்க் இல்லாவிட்டால் பரவாயில்லை. ஆனால் கண்டென்ஸ்டு மில்க் சேர்த்தால், ரசமலாய் சுவை இன்னும் அற்புதமாக இருக்கும்.

* ரசமலாய் தயாரித்த பின், அதை ஃப்ரிட்ஜில் சிறிது நேரம் வைத்து பின் பரிமாறினால், இன்னும் சுவை அற்புதமாக இருக்கும்.

இந்த பதிவின் மூலமாக தீபாவளி ஸ்பெஷல் ரசமலாய் ரெசிபி எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி தீபாவளி ஸ்பெஷல் ரசமலாய் ரெசிபி ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

admin

Recent Posts

Pattukkottai Nadiamman Temple Therottam LIVE நாடியம்மன் கோயில் தேரோட்டம்

Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…

2 years ago

Ramaswamy Venkataraman | இரா வெங்கட்ராமன் முன்னாள் குடியரசுத் தலைவர் | ராஜாமடம்

இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…

2 years ago

அன்பு ஒன்றுதான் அனாதை இல்லை | அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் | Social Activist Balamurugan

அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…

2 years ago

முதல் சுயமரியாதைப் போராளி பட்டுக்கோட்டை அஞ்சா நெஞ்சன் அழகிரிசாமி | Pattukkottai Alagiri

Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…

2 years ago

மனோரா கோட்டை பட்டுக்கோட்டை | Manora Fort Pattukkottai

பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…

2 years ago