திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளருமான ராம.நாராயணன் (Director Rama Narayanan) காலமானார். அவருக்கு வயது 67.
சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்ட இவர், சிங்கப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், அவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சிகிச்சைப் பலனின்றி இறந்தார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்பட 125-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியவர் என்ற உலக சாதனையை தன்வசம் கொண்டிருந்த ராம. நாராயணன், பல வெற்றிப் படங்களைத் தயாரித்தவர். தயாரிப்பாளர் சங்கத் தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்தவர்.
தமிழ் சினிமாவில் விலங்குகளை வைத்தும், அவற்றை முக்கியக் கதாபாத்திரங்களாக வலம்வரச் செய்து இயக்கிய இவரது படங்களே இவருக்கு அடையாளமாக இருந்தன. குறிப்பாக, பக்திப் படங்கள் பலவற்றை கொடுத்தவர் இவர்.
மிகக் குறைந்த பட்ஜெட்டிலும், மிக குறுகிய காலகட்டத்திலும் படங்களை எடுத்து, வணிக ரீதியில் பல வெற்றிகளை இவர் தந்ததும் கவனிக்கத்தக்கது. வீரன் வேலுதம்பி, ஆடி வெள்ளி, துர்கா, ராஜ காளியம்மன் உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர்.
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை Agricultural Technology Management Agency ATMA : அட்மா திட்டம் தமிழ்நாட்டில் 2005-06 ஆம்…
Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…
இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…
அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…
Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…
பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…