Categories: சைவம்

Crunchy Paneer Nuggets Recipe In Tamil | மொறுமொறுப்பான பன்னீர் நக்கட்ஸ்

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான மொறுமொறுப்பான… பன்னீர் நக்கட்ஸ் (Paneer Nuggets) ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் விரும்பி சாப்பிடும்படியான ஒரு ஸ்நாக்ஸ் ரெசிபியை செய்து கொடுக்க நினைத்தால், கால்சியம் மற்றும் புரோட்டீன் அதிகம் நிறைந்த பன்னீர் கொண்டு சுவையான பன்னீர் நக்கட்ஸ் செய்து கொடுங்கள். இது மொறுமொறுப்பாக இருப்பதுடன், வீட்டில் உள்ளோர் அனைவருமே விரும்பி சாப்பிடுமாறு இருக்கும்.

தேவையான பொருட்கள்:

* பன்னீர் – 200 கிராம் (துண்டுகளாக்கிக் கொள்ளவும்)

* மைதா – 1/4 கப்

* மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

* எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்

* சோள மாவு – 1 டேபிள் ஸ்பூன்

* பேக்கிங் பவுடர் – 1/2 டீஸ்பூன்

* மிளகுத் தூள் – 1/2 டீஸ்பூன்

* பொடியாக நறுக்கிய பூண்டு – 1 டீஸ்பூன்

* பால் – தேவையான அளவு

* பிரட் தூள் – 1/4 கப்

* கார்ன் ப்ளேக்ஸ் – 1/2 கப்

* உப்பு – தேவையான அளவு

* எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

Paneer Nuggets செய்முறை:

* முதலில் ஒரு பௌலில் பன்னீர் துண்டுகளை எடுத்து, அதில் சுடுநீரை ஊற்றி பன்னீரை சிறிது நேரம் ஊற வையுங்கள்.

* பின் நீரை முழுமையாக வடிகட்டி வெளியேற்றிவிட்டு, பன்னீர் துண்டுகளில் மிளகாள் தூள், உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து பிரட்டி விடுங்கள்.

* பின்பு கார்ன் ப்ளேக்ஸை பொடி செய்து, அதை பிரட் தூளுடன் சேர்த்து கலந்து விடுங்கள்.

* பிறகு பிரட்டி வைத்துள்ள பன்னீரை பிரட் தூளில் பிரட்டி எடுத்து, ஒரு தட்டில் தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.

* அடுத்து ஒரு பௌலில் மைதா மாவு, சோள மாவு, பேக்கிங் பவுடர், மிளகுத் தூள், பூண்டு மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, தேவையான அளவு பால் ஊற்றி பன்னீரை கோட்டிங் செய்யும் பதத்தில் கலந்து கொள்ளுங்கள்.

* பின் அதில் ஒவ்வொரு பன்னீர் துண்டுகளையும் போட்டு பிரட்டி தட்டில் வைத்துக் கொள்ளுங்கள்.

* அதன் பின், பன்னீர் துண்டுகளை மீண்டும் பிரட் தூளில் பிரட்டி தட்டில் வைத்துக் கொள்ளுங்கள்.

* இறுதியாக, ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், பன்னீர் துண்டுகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், மொறுமொறுப்பான பன்னீர் நக்கட்ஸ் ரெடி!

இந்த பதிவின் மூலமாக மொறுமொறுப்பான… பன்னீர் நக்கட்ஸ் எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி மொறுமொறுப்பான… பன்னீர் நக்கட்ஸ் ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

admin

Recent Posts

Pattukkottai Nadiamman Temple Therottam LIVE நாடியம்மன் கோயில் தேரோட்டம்

Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…

2 years ago

Ramaswamy Venkataraman | இரா வெங்கட்ராமன் முன்னாள் குடியரசுத் தலைவர் | ராஜாமடம்

இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…

2 years ago

அன்பு ஒன்றுதான் அனாதை இல்லை | அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் | Social Activist Balamurugan

அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…

2 years ago

முதல் சுயமரியாதைப் போராளி பட்டுக்கோட்டை அஞ்சா நெஞ்சன் அழகிரிசாமி | Pattukkottai Alagiri

Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…

2 years ago

மனோரா கோட்டை பட்டுக்கோட்டை | Manora Fort Pattukkottai

பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…

2 years ago