சைவம்

Creamy Tomato And Spinach Pasta Recipe | டேஸ்ட்டியான க்ரீம் நிறைந்த பசலைக் கீரை பாஸ்தா செய்வது எப்படி?

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான டேஸ்ட்டியான க்ரீம் நிறைந்த பசலைக் கீரை பாஸ்தா செய்வது எப்படி? ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

தினமும் இரவு என்ன உணவு தயாரிப்பது என்பது தாய்மார்களுக்கு ஒரு மிக பெரிய கேள்வி. இரவு உணவு என்பது பொதுவாக லைட்டாக இருப்பது நன்மை தரும். அதுவே ஊட்டச்சத்துடன் இருந்தால் மிகவும் நல்லது.

ஆகவே இன்று
பசலைக் கீரை மேக்ரோனி என்ற இந்த ரெசிபி செய்வதற்கு மிகவும் எளியது. ஆனால் இந்த உணவில் இரும்பு சத்தும் வைட்டமின் சத்தும் அதிகமாக உள்ளன. மேலும் இதன் சுவையும் அற்புதமானது. இதனை தயாரிப்பதில் எந்த ஒரு கடினமும் இல்லாமல், மிகவும் எளிய முறையில் தயார் செய்யலாம்.

இந்த ரெசிபியை மேலும் சுவையாக மாற்ற இதனுடன் சிறிது க்ரீம் அல்லது சீஸ் சேர்த்துக் கொள்ளலாம். வார நாட்களில் இரவு நேரங்களில் என்ன செய்வதென்று குழம்பி கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு நல்ல இரவு உணவாக இந்த க்ரீம் நிறைந்த பசலைக் கீரை மேக்ரோனி ரெசிபி இருக்கும்.

Recipe By: Chef .கௌரவ் சதா

Recipe Type: சிற்றுண்டி

Serves: 3

தண்ணீர் – 1 லிட்டர்

உப்பு – தேவைக்கேற்ப

மக்ரோனி – 2 கப்

ஆலிவ் எண்ணெய் – 2 ஸ்பூன்

பூண்டு பற்கள் (பொடியாக நறுக்கியது)- 4

சின்ன வெங்காயம் (பொடியாக நறுக்கியது) – 1

தக்காளி பொடியாக நறுக்கியது) – 2

காளான் (நறுக்கியது) – 3

ஸ்பினச் (கீரை) – 1 கட்டு

டையட் மயோனிஸ் – 5 ஸ்பூன்

மிளகு தூள் – 1 ஸ்பூன்

ஒரு அடி கனமான பாத்திரத்தை எடுத்துக் கொள்ளவும்.

அதில் 1 லிட்டர் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.

அந்த நீரில் உப்பு சேர்த்து மக்ரோனியை போட்டு வேக வைக்கவும்.

5 நிமிடங்கள் வேக விடவும்.

அவ்வப்போது அடியில் மக்ரோனி தாங்காமல் இருக்க கிளறி விடவும்.

5 நிமிடத்திற்கு பிறகு, மக்ரோனியை வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும்.

வடிகட்டி எடுத்து வைத்த நீரில் 120மிலி தண்ணீரை தனியே எடுத்து வைத்து கொள்ளவும்.

இதனை பிறகு பயன்படுத்த வேண்டும்.

நான்-ச்டிக் கடாய் ஒன்றை எடுத்துக் கொள்ளவும்.

அதில் சிறிதளவு ஆலிவ் எண்ணெய் ஊற்றவும் .

எண்ணெய் காய்ந்தவுடன், பூண்டு மற்றும் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

நன்கு வதங்கியவுடன், அதில் தக்காளியை சேர்க்கவும்.

தக்காளி வெந்தவுடன், காளான் மற்றும் கீரையை சேர்க்கவும்.

2 – 3 நிமிடங்கள் நன்றாக வத்தக்கவும்.

கீரையில் இருக்கும் நீர் வெளியேறும்.

அதன் பின்பு, சிறிதளவு மிளகு தூள் மற்றும் உப்பு சேர்க்கவும்.

மக்ரோனி வேக வைத்து வடிகட்டி எடுத்து வைக்கப்பட்ட நீரை இப்போது இந்த கலவையில் சேர்க்கவும்.

நன்றாக கிளறவும். தற்போது அடுப்பில் இருந்து கடாயை இறக்கி, மயோனிஸ் சேர்த்து நன்றாக கிளறவும்.

பின்பு மறுபடி, அடுப்பில் வைத்து கிளறவும்.

1 நிமிடத்தில் சாஸ் சற்று கெட்டியாக மாறும்.

இந்த நேரத்தில் மக்ரோனியை கலந்து நன்றாக கிளறி விடவும்.

க்ரீம் நிறைந்த பசலைக் கீரை மேக்ரோனி தயார்.

கொத்துமல்லி , கேரட் துருவல் போன்றவற்றால் அலங்கரித்து பரிமாறலாம்.

இந்த பதிவின் மூலமாக டேஸ்ட்டியான க்ரீம் நிறைந்த பசலைக் கீரை பாஸ்தா செய்வது எப்படி? எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி டேஸ்ட்டியான க்ரீம் நிறைந்த பசலைக் கீரை பாஸ்தா செய்வது எப்படி? ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

About the author

admin

Leave a Comment