நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான கொத்தமல்லி சிக்கன் ரோஸ்ட் ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…
சிக்கனைக் கொண்டு பல சுவையான சமையலை செய்யலாம். நீங்கள் எப்போதும் சிக்கனைக் கொண்டு ஒரே மாதிரியான சமையலை செய்பவராயின், இந்த வாரம் சற்று வித்தியாசமான அதே சமயம் சுவையான ஒரு சிக்கன் ரெசிபியை முயற்சித்துப் பாருங்கள். அது தான் கொத்தமல்லி சிக்கன் ரோஸ்ட். இது ரசம் சாதத்திற்கு அட்டகாசமாக இருக்கும். அதோடு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையிலும் இருக்கும்.
MOST READ: காரமான… பெப்பர் மட்டன் வறுவல்
தேவையான பொருட்கள்:
* சிக்கன் – 500 கிராம்
* மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
* கரம் மசாலா – 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
* உப்பு – சுவைக்கேற்ப
* இஞ்சி பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன்
* கொத்தமல்லி இலைகள் – 3/4 கப் (நன்கு பொடியாக நறுக்கியது)
* எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் கழுவிய சிக்கனை ஒரு பௌலில் எடுத்துக் கொண்டு, அதில் மிளகாய் தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள், உப்பு, இஞ்சி பூண்டு விழுது மற்றும் கொத்தமல்லி இலைகளை சேர்த்து நன்கு பிரட்டி, ஒரு மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* ஒரு மணிநேரம் கழித்த பின், ஒரு நாண்ஸ்டிக் பேனை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், ஊற வைத்துள்ள சிக்கனைப் போட்டு பிரட்டி, குறைவான தீயில் வேக வைக்க வேண்டும்.
* சிக்கன் வேகும் போது அடிக்கடி கிளறி விட வேண்டும். இதனால் சிக்கன் அடிப்பிடிக்காமல் இருக்கும்.
* சிக்கன் நன்கு வெந்துவிட்டால், அடுப்பை அணைத்து பேனை இறக்க வேண்டும். இப்போது சுவையான கொத்தமல்லி சிக்கன் ரோஸ்ட் தயார்.
Image Courtesy: archanaskitchen
இந்த பதிவின் மூலமாக கொத்தமல்லி சிக்கன் ரோஸ்ட் எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி கொத்தமல்லி சிக்கன் ரோஸ்ட் ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை Agricultural Technology Management Agency ATMA : அட்மா திட்டம் தமிழ்நாட்டில் 2005-06 ஆம்…
Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…
இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…
அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…
Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…
பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…