சைவம்

Coorg Style Mushroom Gravy In Tamil | கூர்க் ஸ்டைல் காளான் கிரேவி

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான கூர்க் ஸ்டைல் காளான் கிரேவி ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

தேவையான பொருட்கள்:

* காளான் – 500 கிராம் (நறுக்கியது)

* பச்சை மிளகாய் – 2 (நறுக்கியது)

* வரமிளகாய் – 2

* மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்

* வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)

* தக்காளி – 2 (நறுக்கியது)

* மல்லித்தூள் – 2 டீஸ்பூன்

* மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

* எண்ணெய் – தேவையான அளவு

அரைப்பதற்கு…

* துருவிய தேங்காய் – 1/4 கப்

* சீரகம் – 1 டீஸ்பூன்

* பூண்டு – பற்கள்

செய்முறை:

* முதலில் மிக்சர் ஜாரில், துருவிய தேங்காய், சீரகம் மற்றும் பூண்டு சேர்த்து, சிறிது நீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின் வரமிளகாய், மிளகுத் தூள் சேர்த்து கிளறி, பின் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயைப் போட்டு நன்கு வதக்க வேண்டும்.

* பிறகு அதில் நறுக்கிய காளானை சேர்த்து நன்கு நீர்விடும் வரை வதக்க வேண்டும்.

* பின்பு அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும். பின் தக்காளி மற்றும் மல்லித் தூள், மஞ்சள் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி அரை கப் நீரை ஊற்றி நன்கு கொதிக்க விட வேண்டும்.

* மிதமான தீயில் கிரேவி நன்கு 5 நிமிடம் கொதித்த பின், கிரேவியை அடுப்பில் இருந்து இறக்கினால், சுவையான கூர்க் ஸ்டைல் காளான் கிரேவி தயார்.

Image Courtesy: archanaskitchen

இந்த பதிவின் மூலமாக கூர்க் ஸ்டைல் காளான் கிரேவி எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி கூர்க் ஸ்டைல் காளான் கிரேவி ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

About the author

admin

Leave a Comment