Cinematographer Ravi Varman: எஸ். ரவி வர்மன், ISC, ஒரு இந்திய ஒளிப்பதிவாளர், திரைப்பட தயாரிப்பாளர், தயாரிப்பாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இந்திய மொழிப் படங்கள் எடுத்து பிரசித்தி பெற்றுள்ளார். யதார்த்தமான சித்தரிப்பு மற்றும் கவிதைத்துவமான வடிவமைப்பிற்கான அறிவைப் பெற்றுள்ள ரவி வர்மன் மலையாள படங்களில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். இவர் மாஸ்கோவின் காவேரி என்ற பெயரில் தமிழில் ஒரு காதல் திரைப்படம் இயக்கியுள்ளார். மேலும் பிரிட்டிஷ் தமிழ் பாடலாசிரியர் எம்.ஐ.ஏ எழுதிய “Bird Flu” பாடலுக்காக இசை வீடியோவையும் படம்பிடித்துள்ளார்.
ஆரம்ப வாழ்க்கை
ரவி வர்மன் இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள பொய்யுண்டார்குடிக்காடு என்ற கிராமத்தில் பிறந்தார். வர்மன் இளம் வயதிலெயே தனது தாயை இழந்தவர். அவரின் தாய் இறப்பதற்கு சற்று முன்பு அவர்களின் இல்லத்தின் அருகாமையில் நிகழ்ந்த ஒரு திருமண விழாவில் பங்கு கொண்ட பொழுது, தற்செயலாக அவருடைய தாயின் உருவம் ஒரு புகைப்படக் கலைஞரால் புகைப்படமாக எடுக்கப்பட்டது. வர்மன் ஸ்டூடியோவுக்கு சென்று, தனது தாயாரின் புகைப்படத்தைப் பெரிதாக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார், “காட்சி அமைப்புப் பிழை Out of focus” என்றால் என்னவென்பதை அந்தப் புகைப்படத்தைப் பார்த்த பிறகே அறிந்து கொண்டார். தனது தாயாரின் இறுதிப் புகைப்படம் சரிவர அமையாததால் அதில் ஒரு உத்வேகம் ஏற்பட்டு, புகைப்படம் எடுக்கும் திறனை மேம்படுத்திக் கொள்வதில் தனது ஆர்வத்தை வளர்த்துக் கொண்டதோடு, திரைப்படங்களை ஆர்வத்துடன் பார்க்கும் விருப்பத்தையும் வளர்த்துக் கொண்டார். திரைத்துறையை தனது எதிர்காலமாக தேர்ந்தெடுக்காத அந்த நேரத்திலேயே புகைப்படத்துறையில் நிபுணத்துவம் பெற்றார்.
திரைத்துறை
1999 ஆம் ஆண்டு முதல் மூன்று ஆண்டுகள் மலையாள படங்களில் பணிபுரிந்த பிறகு, அவர் 2003ல் பாலிவுட் படமான Yeh Dil பணியாற்றினார். பின்னர் தெலுங்கு திரைப்படமான Jai (ஜாய்) திரைப்படத்தில் பணியாற்றினார். அதனைத் தொடர்ந்து ஹிந்தி திரைப்படத்துறையில் பல வாய்ப்புகளான Armaan (அர்மானன்), Bee Busthar (பீ பஸ்தார்), Ramji Londonwale (ராம்ஜி லண்டன்வால்) மற்றும் Phir Milenge (பீர் மிலேங்கே) படங்களும், அத்துடன் இந்திய ஆங்கில திரைப்படமான Five Five Four (ஃபைவ் ஃபைவ் ஃப்போர்) போன்ற படங்களும் கிடைத்தன.
தமிழராக இருந்த போதிலும், 2002 வரை அவர் தமிழ் திரைப்படங்களில் பணிபுரியவில்லை. சுசீ கணேசனின் Five Star (ஃபைவ் ஸ்டார்) திரைப்படம் முதற்படமாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து எஸ்.சங்கர் இயக்கிய அந்நியன், கவுதம் மேனனின் வேட்டையாடு விளையாடு கே.எஸ்.ரவிக்குமாரின் தசாவதாரம் மற்றும் பிரபு தேவாவின் வில்லு, போன்ற தமிழ் திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராக பிரபலமான இயக்குநர்களுடனும் பணிபுரிந்தார். திரைப்படங்களில் பணியாற்றியதைத் தொடர்ந்து அவர் 500 க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி விளம்பரங்கள், இசை ஆல்பங்கள், குறும்படங்கள் மற்றும் ஆவணப்படங்களில் பணியாற்றியுள்ளார். ஒளிப்பதிவு மற்றும் இயக்கத்தையும் மீறி, இலக்கியத்திற்கான அவரது இயல்பான திறனானது, ‘யாவரும் கேளீர்’ என்ற ஆன் லைன் (வலைதள) பத்திரிக்கையை தமிழ் ஸ்டூடியோவுக்கென படைக்கத் தோன்றியது.
விருதுகளும் பாராட்டுகளும் Awards and Honours
- 23rd EME France Film Festivalலில் மலையாளத் திரைப்படம் Santhamற்கு சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது (Best Cinematographer Award) (2000)
- Filmfareலில் அந்நியன் படத்திற்கான சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது (Best Cinematographer Award) (2006)
- Tamil Nadu State Film Award வேட்டையாடு விளையாடு படத்திற்கென சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது (2007)
- Vikitan வழங்கிய வேட்டையாடு விளையாடு படத்திற்காக தென்னிந்திய அளவிலான சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது (2007)
- தசாவதாரம் படத்திற்காக ITFAவின் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது (2009)
- ஃப்பர்ஃபி படத்திற்கென Star Guildன் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது (2012)
- ஃப்பர்ஃபி படத்திற்கென Screenனின் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது (2012)
- ஃப்பர்ஃபி படத்திற்கென TOIFAவின் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது (2012)
- ஃப்பர்ஃபி படத்திற்கென IIFAவின் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது (2012)
- Goliyon Ki Raasleela Ram-Leela படத்திற்கென Zee Cineன் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது (2014)
Filmography
இயக்குனர் ரவி வர்மன்
மாஸ்கோவின் காவிரி (2010)
Treasure Music Video (2011) Also as Cinematographer and Lyricist
தயாரிப்பாளர் ரவி வர்மன்
Azhagu (2010)
Vellaiya Irukiravan Poi Solla Maatan (2015)
ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் Cinematographer Ravi Varman
Year | Film | Language |
---|---|---|
1999 | Jalamarmaram | Malayalam |
2000 | Sathyam Sivam Sundaram | Malayalam |
Santham | Malayalam | |
2001 | Valliettan | Malayalam |
Vakkalathu Narayanankutty | Malayalam | |
Five Star | Tamil | |
2003 | Yeh Dil | Hindi |
Jai | Telugu | |
Armaan | Hindi | |
Kilichundan Mampazham | Malayalam | |
Bee Busthar | Malayalam | |
2004 | Five by Four | English |
Phir Milenge | Hindi | |
Autograph | Tamil | |
2005 | Anniyan | Tamil |
Ramji Londonwale | Hindi | |
2006 | Vettaiyaadu Vilaiyaadu | Tamil |
2008 | Dasavathaaram | Tamil |
2009 | Villu | Tamil |
2010 | Kandahar | Malayalam |
2011 | Badrinath | Telugu |
2012 | Barfi! | Hindi |
2013 | Goliyon Ki Raasleela Ram-Leela | Hindi |
2015 | Tamasha | Hindi |
2017 | Kaatru Veliyidai | Tamil |
Jagga Jasoos | Hindi | |
Heartbeats | English | |
2018 | Sanju | Hindi |
2019 | Mission Mangal | Hindi |
Kolaambi | Malayalam | |
2022 | Ponniyin Selvan: I | Tamil |
2023 | Salaam Venky | Hindi |
Indian 2 | Tamil | |
TBA | Bole Chudiyan | Hindi |
கடந்த 20 வருடங்களாக இந்திய சினிமாவில் பல வெற்றி படங்களுக்கு ஒளியூட்டியவர்.புதுமையான கோணங்களால் காட்சிக்கு காட்சி நம்மை பிரம்மிக்க வைத்தவர்.
திரைப்படங்களில் ஒளி என்பதை ஒரு மொழியாக காட்டியவர்.வெறும் கதாபாத்திரங்களை மட்டும் அழகாக காட்டுவது சினிமா அல்ல அந்த காட்சியினை பார்வையாளனுக்கு மனதில் பதிய வைப்பதே சினிமா என்று நிரூபித்து காட்டிய வல்லவன் இந்த ரவி வர்மன்.
தமிழ் திரையுலகம் வண்ணமயமான நினைவுகளை உருவாக்கிய ஒளிப்பதிவாளர் ரவி வர்மனின் 20 ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது. நிறைய பிரபலங்கள் ரவி வர்மாவுக்கு வாழ்த்து சொல்லி வருகின்றனர். தொடர்ந்து பல மொழி படங்கள் இவர் செய்ய வேண்டும் என்று இவரது சிஷ்யர்கள் கேமரா காதலர்கள் இவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர். மேலும் இந்த லாக் டவுன் சமயத்திலும் நிறைய ஒளிப்பதிவாளர்களுக்கு ரவி வர்மா ஒரு எடுத்துக்காட்டாக உள்ளார். இவரை காதலிக்கும் இவரது சிஷ்யர்கள் இவரது படங்களை பார்ப்பதும், பல விதமான கேமரா யுக்திகளை கையாள்வதும் தொடந்த வண்ணம் உள்ளது . நல்ல படைப்பாளிகள் என்றுமே போற்றப்படுவர்கள். அப்படி ரவி வர்மன்னின் ஒவ்வொரு படைப்பு உழைப்பும் காலம் கடந்தும் பேசும் .