சைவம்

Plum Cake Balls Recipe | கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்: ப்ளம் கேக் பால்ஸ் ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கிறது. பலரும் கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக வீட்டிலேயே பல வித்தியாசமான கேக் ரெசிபிக்களை செய்ய நினைப்பார்கள்.
இப்போது கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் ப்ளம் கேக் பால்ஸ் எப்படி செய்வதென்பதைக் காண்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* ப்ளம் கேக் / ஃபுரூட் கேக் – 2 கப்

* பட்டர் க்ரீம் – 3-4 டேபிள் ஸ்பூன்

* டார்க் சாக்லேட் – ஒரு கப்

* ஸ்பிரிங்கல்ஸ் (Sprinkles) – தேவையான அளவு

செய்முறை:

* முதலில் ஒரு பௌலில் ப்ளம் கேக் அல்லது ஃபுரூட் கேக்கை உதிர்த்து விட வேண்டும்.

* பின் அதில் பட்டர் க்ரீம் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

* பின்பு அதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். பின் அதை ஃப்ரிட்ஜில் ஒரு மணிநேரம் வைத்து குளிர வைக்கவும்.

* பிறகு ஒரு பௌலில் டார்க் சாக்லேட்டை டபுள் பாய்லிங் முறையில் உருக்கிக் கொள்ளவும்.

* பின் ஃப்ரிட்ஜில் உள்ள உருண்டைகளை எடுத்து, ஒவ்வொரு உருண்டையின் மேல் ஒரு ஸ்பூன் உருகிய சாக்லேட்டை ஊற்றி, மேலே ஸ்பிரிங்கல்ஸ் தூவி, சில நிமிடங்கள் அப்படியே விட்டால், சுவையான ப்ளம் கேக் பால்ஸ் தயார்.

குறிப்பு:

ஸ்பிரிங்கல்ஸ் இல்லாவிட்டால் விருப்பமுள்ளவர்கள் ப்ளம் கேக் பால்ஸ் மேலே நட்ஸ் அல்லது உலர் பழங்களைத் தூவிக் கொள்ளலாம்.

IMAGE COURTESY

இந்த பதிவின் மூலமாக கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்: ப்ளம் கேக் பால்ஸ் எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்: ப்ளம் கேக் பால்ஸ் ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

About the author

admin

Leave a Comment