நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான ருசியான… சிக்கன் சூப் ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…
சூப் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதுவும் உடல் எடையைக் குறைக்க நினைப்போர் உணவில் சூப்பை அதிகம் சேர்த்துக் கொள்வது, எதிர்பார்த்த பலனை விரைவில் பெற உதவி புரியும். நீங்கள் அசைவ பிரியராக இருந்தால், குறிப்பாக சிக்கன் பிடிக்குமானால், சிக்கனைக் கொண்டு சூப் செய்து குடிக்கலாம். இது மிகவும் ருசியாக இருப்பதோடு, ஆரோக்கியமானதும் கூட. நீங்கள் இதுவரை கடைகளில் தான் சிக்கன் சூப் வாங்கி குடித்துள்ளீர்களா? வீட்டிலேயே சிக்கன் சூப் செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால் இக்கட்டுரையைத் தொடர்ந்து படியுங்கள்.
ஏனெனில் கீழே சிக்கன் சூப் எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
MOST READ: செட்டிநாடு முட்டை பொடிமாஸ்
தேவையான பொருட்கள்:
* சிக்கன் – 300 கிராம்
* மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
* தண்ணீர் – 2 கப்
அரைப்பதற்கு…
* சின்ன வெங்காயம் – 10
* கொத்தமல்லி – 1/4 கப்
* சீரகம் – 1 டீஸ்பூன்
* மிளகு – 1/2 டீஸ்பூன்
தாளிப்பதற்கு…
* எண்ணெய் – 1 1/2 டீஸ்பூன்
* ஏலக்காய் – 1
* சீரகம் – 1/2 டீஸ்பூன்
* கறிவேறிப்பிலை – சிறிது
* பெரிய வெங்காயம் – 1 சின்ன வெங்காயம்
செய்முறை:
* முதலில் சிக்கனை சிறிது மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் அரைப்பதற்கு கொடுத்துள்ள சின்ன வெங்காயம், கொத்தமல்லி, மிளகு, சீரகத்தைப் போட்டு நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், ஏலக்காய், சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து லேசான பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் கழுவி வைத்துள்ள சிக்கன் துண்டுகள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து 2 நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.
* பின் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை குறைந்தது 3-5 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின்பு தேவையான அளவு நீர், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து குக்கரை மூடி 5 விசில் விட்டு இறக்கினால், சுவையான சிக்கன் சூப் தயார்.
Image Courtesy: sharmispassions
இந்த பதிவின் மூலமாக ருசியான… சிக்கன் சூப் எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி ருசியான… சிக்கன் சூப் ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை Agricultural Technology Management Agency ATMA : அட்மா திட்டம் தமிழ்நாட்டில் 2005-06 ஆம்…
Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…
இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…
அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…
Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…
பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…