அசைவம்

Chicken, Rice & Lime Soup Recipe In Tamil | சிக்கன் ரைஸ் லைம் சூப்

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான சிக்கன் ரைஸ் லைம் சூப் ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

நீங்கள் எடையைக் குறைக்கும் டயட்டில் இருக்கிறீர்களா? சூப் அதிகம் குடிப்பீர்களா? தினமும் ஒரே மாதிரியான சூப் குடித்து அலுத்துவிட்டதா? அப்படியானால் சிக்கன் ரைஸ் லைம் சூப் குடியுங்கள். இந்த சூப் சுவையானது மட்டுமின்றி, சத்தானதும் கூட. முக்கியமாக இந்த சூப்பை ஒரு பௌல் குடித்தால், அது வயிற்றை நீண்ட நேரம் நிரப்பி வைத்திருக்கும்.

தேவையான பொருட்கள்:

* ஆலிவ் ஆயில் – 2 டீஸ்பூன்

* பூண்டு – 5 பல் (பொடியாக நறுக்கியது)

* வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

* தக்காளி கூழ்/அரைத்த தக்காளி – 1 கப்

* சிக்கன் ஸ்டாக் அல்லது வெஜிடேபிள் ஸ்டாக் – 2 கப்

* சிக்கன் நெஞ்சுக்கறி – 1 பெரிய துண்டு (பொடியாக நறுக்கியது)

* மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

* சீரகத் தூள் – 1 டீஸ்பூன்

* மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

* சர்க்கரை – 1/2 டீஸ்பூன்

* உலர்ந்த கற்பூரவள்ளி/ஆரிகனோ – 1 1/2 டீஸ்பூன்

* சாதம் – 1 1/2 கப்

* கொத்தமல்லி – சிறிது

* எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன் அல்லது சுவைக்கேற்ப

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பூண்டு, வெங்காயம் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்க வேண்டும்.

* பின் அதில் தக்காளி கூழ், ஸ்டாக், மிளகாய் தூள், சீரகப் பொடி, மிளகுத் தூள், உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து கிளற வேண்டும்.

* பின்பு அதில் ஆரிகனோ சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.

* பிறகு அதில் சிக்கனை சேர்த்து குறைவான தீயில் சிக்கனை நன்கு வேக வைக்க வேண்டும்.

* சிக்கன் நன்கு வெந்ததும், அதில் சாதத்தை சேர்த்து சில நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும்.

* இறுதியில் கொத்தமல்லி மற்றும் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கிளறி இறக்கினால், சிக்கன் ரைஸ் லைம் சூப் தயார்.

இந்த பதிவின் மூலமாக சிக்கன் ரைஸ் லைம் சூப் எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி சிக்கன் ரைஸ் லைம் சூப் ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

About the author

admin

Leave a Comment