நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான சிக்கன் பிரட்டல் ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…
இந்த வார விடுமுறை நாளில் ஒரு சுவையான மற்றும் வித்தியாசமான ரெசிபியை முயற்சிக்க விரும்புகிறீர்களா? இந்த வாரம் நீங்கள் சிக்கன் எடுக்க திட்டமிட்டுள்ளீர்களா? அப்படியானால் சிக்கன் பிரட்டல் செய்யுங்கள். இந்த சிக்கன் பிரட்டல் ரசம் சாதம், தயிர் சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். குறிப்பாக இந்த சிக்கன் பிரட்டல் செய்வதற்கு ஈஸியாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
* தேங்காய் எண்ணெய் – 1/4 கப்
* சின்ன வெங்காயம் – 10-15
* துருவிய தேங்காய் – 1/4 கப்
* கரம் மசாலா – 1 டீஸ்பூன்
* கொத்தமல்லி – சிறிது
* எலுமிச்சை சாறு – சுவைக்கேற்ப
ஊற வைப்பதற்கு…
* சிக்கன் – 500 கிராம்
* இஞ்சி – 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* பூண்டு – 2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை – சிறிது
* தயிர் – 1/4 கப்
* உப்பு – சுவைக்கேற்ப
மசாலா பொருட்கள்..
* காஷ்மீரி மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
* மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
* மல்லித் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் காஷ்மீரி மிளகாய் தூள், மல்லித் தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து 2 நிமிடம் நன்கு வறுத்து இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பௌலில் வெங்காயம், வறுத்த மசாலா பொடி, உப்பு சேர்த்து கிளறி, பின் அதில் கறிவேப்பிலை, இஞ்சி, பூண்டு மற்றும் சிக்கனை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் தயிரை சேர்த்து நன்கு கிளறி 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு ஒரு பேனை அடுப்பில் வைத்து, அதில் ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து கிளறி, மூடி வைத்து சிக்கனை நன்கு வேக வைக்க வேண்டும்.
* சிக்கனில் இருந்து நீர் வெளிவர ஆரம்பிக்கும் போது, எண்ணெய் ஊற்றி கிளறி, சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* சிக்கன் நன்கு பொன்னிறமாக வெந்ததும், அதில் தேங்காய், கரம் மசாலா சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* இறுதியாக கொத்தமல்லி மற்றும் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கிளறினால், சிக்கன் பிரட்டல் தயார்.
இந்த பதிவின் மூலமாக சிக்கன் பிரட்டல் எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி சிக்கன் பிரட்டல் ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை Agricultural Technology Management Agency ATMA : அட்மா திட்டம் தமிழ்நாட்டில் 2005-06 ஆம்…
Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…
இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…
அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…
Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…
பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…