நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான ருசியான… சிக்கன் கெட்டி குழம்பு ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…
சிக்கன் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. சிக்கனில் புரோட்டீன் அதிகம் உள்ளதால், அடிக்கடி இதை உணவில் சேர்ப்பது நல்லது. இது தசை வளர்ச்சிக்கு உதவி புரியும். மேலும் சிக்கனில் பி வைட்டமின்கள் மற்றும் செலினியம் அதிகம் உள்ளது. அதிலும் சிக்கனை எண்ணெயில் போட்டு பொரித்து சாப்பிடுவதை விட குழம்பாக தயாரித்து சாப்பிடுவது மிகவும் நல்லது. இதனால் சிக்கனில் உள்ள முழு சத்துக்களையும் பெறலாம்.
நீங்கள் சிக்கன் பிரியரா? சிக்கனைக் கொண்டு பலவிதமான ரெசிபிக்களை செய்து சுவைக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் சிக்கன் கெட்டி குழம்பை இன்று முயற்சித்துப் பாருங்கள். இந்த சிக்கன் கெட்டி குழம்பு சாதத்திற்கு மட்டுமின்றி, சப்பாத்தி, பூரி, இட்லி, தோசை போன்றவற்றிற்கும் அற்புதமாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
* சிக்கன் – 1/2 கிலோ
* வெங்காயம் – 1
* தக்காளி – 2
* இஞ்சி பூண்டு பேஸ்ட் – 3 டேபிள் ஸ்பூன்
* குழம்பு மிளகாய் தூள் – 2 டேபிள் ஸ்பூன்
* எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
* உப்பு – தேவையான அளவு
அரைப்பதற்கு…
* தேங்காய் – 1 கப் (துருவியது)
* சோம்பு – 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் சிக்கனை மஞ்சள் தூள் சேர்த்து கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் மிக்ஸியில் தேங்காய் மற்றும் சோம்பு போட்டு, சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு குக்கரை அடுப்பில் வைத்து சூடேறியதும், அதில் எண்ணெய் ஊற்ற வேண்டும்.
* பின் அதில் வெங்காயத்தைப் போட்டு லேசாக வதக்கி, பின்பு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்க வேண்டும்.
* பிறகு தக்காளியை சேர்த்து மென்மையாக வதக்க வேண்டும்.
* அடுத்ததாக கழுவி வைத்துள்ள சிக்கனை சேர்த்து, சிறிது உப்பு தூவி கிளறி 4-5 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* பின் அதில் குழம்பு மிளகாய் தூள் சேர்த்து கிளறி, அரைத்து வைத்துள்ள தேங்காயையும் சேர்த்து தேவையான அளவு நீர் ஊற்றி கிளறி, உப்பு சுவை பார்த்து, குக்கரை மூடி 4-5 விசில் விட்டு இறக்கினால், ருசியான சிக்கன் கெட்டி குழம்பு ரெடி!
Image Courtesy: Divyalakshmi Soundarrajan
இந்த பதிவின் மூலமாக ருசியான… சிக்கன் கெட்டி குழம்பு எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி ருசியான… சிக்கன் கெட்டி குழம்பு ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை Agricultural Technology Management Agency ATMA : அட்மா திட்டம் தமிழ்நாட்டில் 2005-06 ஆம்…
Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…
இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…
அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…
Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…
பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…