அசைவம்

Chicken Chops Recipe In Tamil | ருசியான… சிக்கன் சாப்ஸ்

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான ருசியான… சிக்கன் சாப்ஸ் ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

சிக்கனைக் கொண்டு பல்வேறு ருசியான உணவுகள் உலகில் தயாரிக்கப்படுகின்றன. அதில் ஒன்று தான் சிக்கன் சாப்ஸ். இந்த சிக்கன் சாப்ஸ் ஒரு அற்புதமான ஸ்டாட்டர்ஸ். அதோடு இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் வகையிலும் இருக்கும். நீங்கள் கடைகளில் சிக்கன் சாப்ஸ் வாங்கி சுவைத்திருப்பீர்கள். ஆனால் அந்த சிக்கன் சாப்ஸ் ரெசிபியை உங்கள் வீட்டிலேயே செய்தால், எவ்வளவு வேண்டுமானாலும் நீங்கள் செய்து சாப்பிடலாம் அல்லவா?

ஆகவே தமிழ் போல்ட்ஸ்கை சிக்கன் சாப்ஸ் ரெசிபியை வீட்டிலேயே எப்படி செய்வதென்று கொடுத்துள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

MOST READ: மலபார் சிக்கன் ரோஸ்ட்

தேவையான பொருட்கள்:

* சிக்கன் கொத்துக்கறி – 300 கிராம்

* வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

* பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கியது)

* முட்டை – 1

* இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்

* கொத்தமல்லி – 2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

* புதினா இலைகள் – 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

* மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்

* மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

* மல்லித் தூள் – 1/2 டீஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

* எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்

* எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

* பிரட் தூள் – சிறிது

செய்முறை:

* ஒரு பௌலில் சிக்கன் கொத்துக்கறியை நன்கு கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும்.

* பின் அதில் வெங்காயம், பச்சை மிளகாய், முட்டை, இஞ்சி பூண்டு விழுது, கொத்தமல்லி, புதினா, மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லித் தூள், உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

* பின்பு அதை ஃப்ரிட்ஜில் வைத்து 15 நிமிடம் ஊற வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.

* எண்ணெய் சூடானதும், சிக்கன் கலவையை சிறு சிறு உருண்டைகளாக அல்லது
Image Courtesy: archanaskitchen

இந்த பதிவின் மூலமாக ருசியான… சிக்கன் சாப்ஸ் எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி ருசியான… சிக்கன் சாப்ஸ் ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

About the author

admin

Leave a Comment