Categories: அசைவம்

Chettinad Nattu Kozhi Uppu Varuval‏ recipe | செட்டிநாடு கோழி உப்பு வறுவல்

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான செட்டிநாடு கோழி உப்பு வறுவல் ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

செட்டிநாடு ரெசிபிக்கள்

தேவையான பொருட்கள்:

* கோழி/சிக்கன் – 1/2 கிலோ

* சின்ன வெங்காயம் – 20 (நறுக்கியது)

* இஞ்சி – 1/2 இன்ச் (தட்டியது)

* பூண்டு – 20 பல் (தட்டியது)

* தக்காளி – 1

* வரமிளகாய் – 10

* மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

* சோம்பு – 1 டீஸ்பூன்

* எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

* கறிவேப்பிலை – சிறிது

* கொத்தமல்லி – சிறிது

செய்முறை:

* முதலில் சிக்கனை சிறு துண்டுகளாக வெட்டிக் கொண்டு, நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.

* பின்பு கழுவிய சிக்கனை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

* பின் அதில் வரமிளகாயைப் போட்டு லேசாக வதக்கி, நறுக்கிய சின்ன வெங்காயம், தட்டி வைத்துள்ள இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

* பிறகு நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.

* அடுத்து ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து சில நிமிடங்கள் நன்கு வதக்க வேண்டும்.

* வேண்டுமானால் சுவைக்கேற்ப உப்பு மற்றும் அரை கப் நீரை ஊற்றி கிளறி, மிதமான தீயில் மூடி வைத்து, 10-15 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

* சிக்கன் நன்கு வெந்ததும் மூடியைத் திறந்து, தீயை அதிகரித்து நீர் முற்றிலும் வற்றும் வரை நன்கு கிளறி விட்டு இறக்கி, மேலே கொத்தமல்லியைத் தூவினால், சுவையான செட்டிநாடு கோழி உப்பு வறுவல் தயார்.

Image Courtesy: naliniscooking

இந்த பதிவின் மூலமாக செட்டிநாடு கோழி உப்பு வறுவல் எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி செட்டிநாடு கோழி உப்பு வறுவல் ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

admin

Recent Posts

Pattukkottai Nadiamman Temple Therottam LIVE நாடியம்மன் கோயில் தேரோட்டம்

Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…

2 years ago

Ramaswamy Venkataraman | இரா வெங்கட்ராமன் முன்னாள் குடியரசுத் தலைவர் | ராஜாமடம்

இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…

2 years ago

அன்பு ஒன்றுதான் அனாதை இல்லை | அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் | Social Activist Balamurugan

அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…

2 years ago

முதல் சுயமரியாதைப் போராளி பட்டுக்கோட்டை அஞ்சா நெஞ்சன் அழகிரிசாமி | Pattukkottai Alagiri

Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…

2 years ago

மனோரா கோட்டை பட்டுக்கோட்டை | Manora Fort Pattukkottai

பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…

2 years ago