நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான செட்டிநாடு ஸ்டைல் பீன்ஸ் முட்டை பொரியல் ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…
செட்டிநாடு ரெசிபிக்களில் பீன்ஸ் முட்டை பொரியல் மிகவும் பிரபலமானதும் சுவையானதும் கூட. நீங்கள் மதிய வேளையில் மிகவும் எளிமையான பொரியல் ஏதேனும் செய்ய விரும்பினால், செட்டிநாடு ஸ்டைல் பீன்ஸ் முட்டை பொரியலை செய்யலாம். இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.
பீன்ஸில் சத்துக்கள் அதிகம் உள்ளது. ஒருவர் அடிக்கடி உணவில் பீன்ஸ் சேர்த்து வந்தால், பல்வேறு நன்மைகளைப் பெறலாம். உங்கள் வீட்டில் உள்ளோர் பீன்ஸ் சாப்பிட மறுத்தால், அவர்களுக்கு அதை முட்டையுடன் சேர்த்து பொரியல் செய்து கொடுங்கள்.
MOST READ: ருசியான… முட்டை ஆம்லெட் குழம்பு
தேவையான பொருட்கள்:
* முட்டை – 6
* பீன்ஸ் – 1 கப் (பொடியாக நறுக்கியது)
* வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
* சீரக விதைகள் – 1 டீஸ்பூன்
* மிளகு – 1 டீஸ்பூன்
* கொத்தமல்லி – சிறிது
* எண்ணெய் – 2 டீஸ்பூன்
* உப்பு – சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
* பின்பு அதில் பீன்ஸ் சேர்த்து, ஒரு சிட்டிகை உப்பு தூவி நன்கு வேகும் வரை வதக்கவும். அதற்குள் மிளு மற்றும் சீரகத்தை மிக்சர் ஜாரில் போட்டு அரைத்து பொடி செய்து கொள்ளவும்.
* பிறகு அரைத்த பொடியை சேர்த்து நன்கு ஒரு நிமிடம் வதக்கவும்.
* அடுத்து, அதில் முட்டைகளை ஒவ்வொன்றாக உடைத்து ஊற்றி, தேவையான அளவு உப்பு தூவி குறைவான தீயில் வைத்து நன்கு கிளறி விடவும்.
* முட்டை நன்கு வெந்ததும், அதன் மேல் கொத்தமல்லியைத் தூவி பிரட்டி இறக்கினால், செட்டிநாடு ஸ்டைல் பீன்ஸ் முட்டை பொரியல் தயார்.
Image Courtesy: archanaskitchen
இந்த பதிவின் மூலமாக செட்டிநாடு ஸ்டைல் பீன்ஸ் முட்டை பொரியல் எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி செட்டிநாடு ஸ்டைல் பீன்ஸ் முட்டை பொரியல் ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை Agricultural Technology Management Agency ATMA : அட்மா திட்டம் தமிழ்நாட்டில் 2005-06 ஆம்…
Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…
இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…
அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…
Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…
பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…