நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான நாவூற செய்யும்… செட்டிநாடு மட்டன் சுக்கா வறுவல் ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…
ஏனென்றால், கீழே செட்டிநாடு மட்டன் சுக்கா வறுவல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் – 1 (பெரியது மற்றும் நறுக்கியது)
* தக்காளி – 4 (நறுக்கியது)
* பச்சை மிளகாய் – 1
* கறிவேப்பிலை – சிறிது
* தண்ணீர் – 1 கப்
ஊற வைப்பதற்கு…
* மட்டன் – 1/2 கிலோ
* இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் – 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
* கரம் மசாலா – 1 டீஸ்பூன்
* மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்
* உப்பு – தேவையான அளவு
அரைப்பதற்கு…
* தேங்காய் – 1/2 கப்
* கசகசா – 2 டேபிள் ஸ்பூன்
* சோம்பு – 1 டேபிள் ஸ்பூன்
தாளிப்பதற்கு…
* தேங்காய் எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
* சோம்பு – 1 டீஸ்பூன்
* பட்டை – 1 துண்டு
* வெங்காயம் – 1 (நறுக்கியது)
* தக்காளி – 1 (நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்
* கறிவேப்பிலை – சிறிது
* பச்சை மிளகாய் – 2 (நீளமாக கீறியது)
* மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
* மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் – 1 டீஸ்பூன்
* கரம் மசாலா – 1 டீஸ்பூன்
* கொத்தமல்லி – சிறிது
செய்முறை:
* முதலில் மட்டனை நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். பின் ஒரு பாத்திரத்தில் கழுவிய மட்டனைப் போட்டு, அதில் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை எல்லாம் சேர்த்து பிரட்டி, குறைந்தது 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின் மிக்ஸியில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு சிறிது நீர் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு குக்கரை எடுத்து அடுப்பில் வைத்து சூடானதும், 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, பின் ஊற வைத்துள்ள மட்டனையும் சேர்த்து கிளறி விட வேண்டும்.
* பின் ஒரு கப் நீரை ஊற்றி கிளறி விட்டு, குக்கரை மூடி 6-7 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடானதும், தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* பின்பு அதில் சோம்பு, பட்டை சேர்த்து தாளித்து, வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 1 நிமிடம் வதக்க வேண்டும்.
* அதன் பின் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கவும். இப்போது குக்கரில் உள்ள மட்டனை அப்படியே கடாயில் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* அடுத்து மிளகாய் தூள், மிளகுத் தூள், மல்லித் தூள், கரம் மசாலா சேர்த்து நன்கு கிளறி விட்டு, அரைத்து வைத்துள்ள தேங்காயையும் சேர்த்து கிளறி விட வேண்டும்.
* கிரேவியில் உள்ள நீர் வற்றி நன்கு கெட்டியாக ஆரம்பிக்கும் போது, அடுப்பை அணைத்துவிட்டு மேலே கொத்தமல்லியைத் தூவினால், செட்டிநாடு மட்டன் சுக்கா வறுவல் ரெடி!
IMAGE COURTESY
இந்த பதிவின் மூலமாக நாவூற செய்யும்… செட்டிநாடு மட்டன் சுக்கா வறுவல் எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி நாவூற செய்யும்… செட்டிநாடு மட்டன் சுக்கா வறுவல் ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .