Categories: அசைவம்

Chettinad Muttai Podimas Recipe In Tamil | செட்டிநாடு முட்டை பொடிமாஸ்

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான செட்டிநாடு முட்டை பொடிமாஸ் ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

முட்டை அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உடலுக்கு மிகவும் ஆரோக்கியமான உணவுப் பொருட்களுள் ஒன்றாகும். தினமும் ஒரு முட்டை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. அப்படிப்பட்ட முட்டையை பலவாறு சமைத்து சாப்பிடலாம். அதில் ஒன்று முட்டை பொடிமாஸ்.
கீழே செட்டிநாடு முட்டை பொடிமாஸ் எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* முட்டை – 6

* தேங்காய் எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

* சீரகம் – 1/2 டீஸ்பூன்

* கறிவேப்பிலை – சிறிது (நறுக்கியது)

* பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கியது)

* வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

* உப்பு – சுவைக்கேற்ப

* மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

* மிளகுத் தூள் – 1/2 டீஸ்பூன்

* கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்

* கொத்தமல்லி – சிறிது (நறுக்கியது)

செய்முறை:

* முதலில் மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

* பின் ஒரு பௌலில் முட்டைகளை உடைத்து ஊற்றி, அதில் சிறிது உப்பு சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகத்தைப் போட்டு தாளித்து, பின் கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து சில நொடிகள் வதக்கவும்.

* பிறகு வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும். அடுத்து மஞ்சள் தூள், மிளகுத் தூள், கரம் மசாலா சேர்த்து நன்கு வதக்கவும்.

* பின்னர் அதில் அடித்து வைத்துள்ள முட்டையை ஊற்றி, நன்கு கிளறி விட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி விடவும்.

* முட்டை நன்கு வெந்ததும், கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான செட்டிநாடு முட்டை பொடிமாஸ் தயார்.

Image Courtesy: archanaskitchen

இந்த பதிவின் மூலமாக செட்டிநாடு முட்டை பொடிமாஸ் எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி செட்டிநாடு முட்டை பொடிமாஸ் ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

admin

Recent Posts

Pattukkottai Nadiamman Temple Therottam LIVE நாடியம்மன் கோயில் தேரோட்டம்

Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…

2 years ago

Ramaswamy Venkataraman | இரா வெங்கட்ராமன் முன்னாள் குடியரசுத் தலைவர் | ராஜாமடம்

இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…

2 years ago

அன்பு ஒன்றுதான் அனாதை இல்லை | அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் | Social Activist Balamurugan

அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…

2 years ago

முதல் சுயமரியாதைப் போராளி பட்டுக்கோட்டை அஞ்சா நெஞ்சன் அழகிரிசாமி | Pattukkottai Alagiri

Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…

2 years ago

மனோரா கோட்டை பட்டுக்கோட்டை | Manora Fort Pattukkottai

பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…

2 years ago