சைவம்

Chettinad Kadamba Chutney Recipe In Tamil | Kadamba Chutney Recipe : செட்டிநாடு கதம்ப சட்னி

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான Kadamba Chutney Recipe : செட்டிநாடு கதம்ப சட்னி ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

உங்கள் வீட்டில் இட்லி, தோசை செய்யும் போது ஒரே மாதிரியான சட்னி செய்யாமல், சற்று வித்தியாசமாக சட்னி செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால் செட்டிநாடு ஸ்பெஷல் கதம்ப சட்னி செய்யுங்கள். இந்த கதம்ப சட்னி இட்லி, தோசை, வெண் பொங்கல் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். மேலும் இந்த சட்னியை சப்பாத்தியுடனும் சாப்பிடலாம். அதோடு இந்த சட்னியை செய்வது சுலபம்.

தேவையான பொருட்கள்:

* உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்

* கடலை பருப்பு – 1 டீஸ்பூன்

* எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

* வரமிளகாய் – 2

* பச்சை மிளகாய் – 1

* பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை

* இஞ்சி – 1/4 இன்ச்

* பெரிய வெங்காயம் – 1 (நறுக்கியது)

* தக்காளி – 1 (நறுக்கியது)

* கறிவேப்பிலை – சிறிது

* புதினா – 1/4 கப்

* கொத்தமல்லி – 1/4 கப்

* தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

* புளி – 1 சிறிய துண்டு

* தண்ணீர் – தேவையான அளவு

தாளிப்பதற்கு..

* எண்ணெய் – 1 டீஸ்பூன்

* கடுகு – 1/2 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, வரமிளகாய், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

* பின் அதில் இஞ்சி, பெருங்காயத் தூள் சேர்த்து வதக்கி, வெங்காயம், தக்காளி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து, நன்கு வதக்க வேண்டும்.

* பின்பு அதில் புதினா மற்றும் கொத்தமல்லி சேர்த்து சுருங்கும் வரை வதக்க வேண்டும்.

* பிறகு தேங்காய் மற்றும் புளி சேர்த்து ஒருமுறை வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.

* பிறகு அதை மிக்சர் ஜாரில் போட்டு, சிறிது நீரை ஊற்றி நன்கு அரைத்து இறக்கி, ஒரு பௌலில் போட்டுக் கொள்ள வேண்டும்.

* இறுதியாக ஒரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு சேர்த்து தாளித்து, சட்னியில் ஊற்றி கிளறினால், சுவையான செட்டிநாட்டு கதம்ப சட்னி தயார்.

Image Courtesy: sharmispassions

இந்த பதிவின் மூலமாக Kadamba Chutney Recipe : செட்டிநாடு கதம்ப சட்னி எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி Kadamba Chutney Recipe : செட்டிநாடு கதம்ப சட்னி ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

About the author

admin

Leave a Comment