நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான சீனி பணியாரம் ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…
பணியாரம் அனைவருக்குமே சாப்பிட பிடிக்கும். நீங்கள் பணியாரத்தை விரும்பி சாப்பிடுபவரானால், உங்களுக்காக ஒரு ஈஸியான பணியார ரெசிபியைப் பற்றி தான் இப்போது பார்க்கப் போகிறோம். இந்த பணியாரத்திற்கு மாவு எதையும் தனியாக அரைக்க வேண்டிய அவசியமில்லை. வீட்டில் மைதா, சர்க்கரை இருந்தால் போதும், அதைக் கொண்டே ஒரு சுவையான பணியாரம் செய்யலாம். இந்த பணியாரத்தின் பெயர் சீனி பணியாரம் அல்லது மைதா பணியாரம்.
தேவையான பொருட்கள்:
* மைதா – 1 கப்
* சர்க்கரை – 1/2 கப்
* சமையல் சோடா – 1/2 டீஸ்பூன்
* ஏலக்காய் பொடி – 1/2 டீஸ்பூன்
* பால் – தேவையான அளவு
* எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா, சர்க்கரை, சமையல் சோடா, ஏலக்காய் பொடி மற்றும் தேவையான அளவு பால் சேர்த்து ஓரளவு கெட்டியாக, கட்டிகளின்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* எண்ணெய் சூடானதும், ஒரு ஸ்பூன் மாவை எடுத்து எண்ணெயில் ஊற்றி பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
* இதேப் போல் அனைத்து மாவையும் பொரித்து எடுத்தால், சீனி பணியாரம் தயார்.
இந்த பதிவின் மூலமாக சீனி பணியாரம் எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி சீனி பணியாரம் ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை Agricultural Technology Management Agency ATMA : அட்மா திட்டம் தமிழ்நாட்டில் 2005-06 ஆம்…
Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…
இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…
அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…
Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…
பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…