நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான கடலைப்பருப்பு அல்வா ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…
கீழே கடலைப்பருப்பு அல்வா எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
MOST READ: தேங்காய் அல்வா
தேவையான பொருட்கள்:
* கடலைப்பருப்பு – 1/2 கப்
* நெய் – 1/8 கப்
* சர்க்கரை – 1/2 கப்
* பால் – 1/2 கப் + 1 டேபிள் ஸ்பூன்
* குங்குமப்பூ – சிறிது
* ஏலக்காய் பொடி – 1 சிட்டிகை
* நறுக்கிய பாதாம் – 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் கடலைப் பருப்பை நீரில் ஒரு மணிநேரம் ஊற வைக்க வேண்டும். பின் அதைக் கழுவி, நீரை முற்றிலும் வடிகட்டிவிட்டு, மிக்சர் ஜாரில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் வெதுவெதுப்பான பாலில் குங்குமப்பூவைப் போட்டு ஊற வைத்துக் கொள்ளவும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பாதி நெய்யை ஊற்றி, அரைத்து வைத்துள்ள கடலைப்பருப்பைப் போட்டு குறைவான தீயில் கட்டிசேராதவாறு கிளறி விட வேண்டும்.
* அப்படி கிளறும் போது கடலைப் பருப்பின் நிறம் மாறி, அதிலிருந்து வீசும் பச்சை வாசனை போனதும், அதில் குங்குமப்பூ பால் மற்றும் சிறிது நீரை ஊற்றி நன்கு கிளறி சிறிது நேரம் மூடி வைத்து வேக வைக்கவும்.
* பருப்பானது நன்கு மென்மையாக மற்றும் முழுமையாக வெந்ததும், அதில் சர்க்கரையை சேர்த்து கிளறி விட வேண்டும்.
* அப்படி கிளறும் வேளையில், கலவையானது சற்று கெட்டியாக ஆரம்பிக்கும். அந்நிலையில் மீதமுள்ள நெய்யை ஊற்றி கிளறி விட வேண்டும். அப்போது அந்த கலவை வாணலியில் ஒட்டாமல் அல்வா பதத்திற்கு வர ஆரம்பிக்கும். அந்த சமயத்தில் ஏலக்காய் பொடி மற்றும் நறுக்கிய பாதாமை சேர்த்து கிளறி இறக்கினால், கடலைப்பருப்பு அல்வா தயார்.
Image Courtesy: sharmispassions
இந்த பதிவின் மூலமாக கடலைப்பருப்பு அல்வா எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி கடலைப்பருப்பு அல்வா ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .