நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான காலிஃப்ளவர் முட்டை சப்ஜி ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…
உங்கள் வீட்டில் இன்று இரவு சப்பாத்தி செய்ய போகிறீர்களா? அந்த சப்பாத்திக்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் காலிஃப்ளவர் மற்றும் முட்டை இருந்தால், அதைக் கொண்டு ஒரு சப்ஜி செய்யுங்கள். இந்த சப்ஜி மிகவும் ஆரோக்கியமானது மட்டுமின்றி, அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் சுவையாகவும் இருக்கும்.
தேவையான பொருட்கள்:
* காலிஃப்ளவர் – 2 கப் (சுத்தம் செய்து நறுக்கியது)
* எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
* சோம்பு – 1 டீஸ்பூன்
* வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி – 2 (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
* கரம் மசாலா – 1 டீஸ்பூன்
* உப்பு – சுவைக்கேற்ப
* முட்டை – 3
செய்முறை:
* முதலில் சுத்தம் செய்து வைத்துள்ள காலிஃப்ளவரை சுடுநீரில் போட்டு எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்னர் வெங்காயத்தைப் போட்டு ஒரு நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு காலிஃப்ளவரை போட்டு, மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளறி விட்டு மூடி வைத்து, சிறிது நேரம் காலிஃப்ளவரை வேக வைக்க வேண்டும்.
* பின் அதில் தக்காளியை சேர்த்து நன்கு தக்காளி வேகும் வரை வேக வைக்க வேண்டும்.
* அடுத்து அதில் மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின்னர் முட்டைகளை உடைத்து ஊற்றி, வேண்டுமானால் சிறிது உப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்கினால், சுவையான காலிஃப்ளவர் முட்டை சப்ஜி தயார்.
இந்த பதிவின் மூலமாக காலிஃப்ளவர் முட்டை சப்ஜி எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி காலிஃப்ளவர் முட்டை சப்ஜி ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை Agricultural Technology Management Agency ATMA : அட்மா திட்டம் தமிழ்நாட்டில் 2005-06 ஆம்…
Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…
இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…
அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…
Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…
பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…