நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான சிம்பிளான… கேரட் வால்நட் பிரட் ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…
கிறிஸ்துமஸ் பண்டிகை வரப்போகிறது. அனைவரும் கிறிஸதுமஸ் பண்டிகைக்கு வீட்டிலேயே கேக் செய்ய திட்டம் தீட்டியிருப்பீர்கள். ஆனால்
முக்கியமாக இது பண்டிகைக் காலங்களில் மட்டுமின்றி, சாதாரண நாட்களில் மாலை வேளையில் குழந்தைகளுக்கு செய்து கொடுக்க ஏற்ற ஒரு அற்புதமான ஸ்நாக்ஸ் ரெசிபியும் கூட. இப்போது கேரட் வால்நட் பிரட் ரெசிபியை எப்படி செய்வதென்று காண்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* முட்டை – 2
* சர்க்கரை – 200 கிராம்
* வெஜிடேபிள் ஆயில் – 160 மிலி
* வென்னிலா எசன்ஸ் – 1 டீஸ்பூன்
* மைதா – 1 1/2 கப்
* பேக்கிங் சோடா – 3/4 டீஸ்பூன்
* பட்டை தூள் – 1 டீஸ்பூன்
* உப்பு – 1/4 டீஸ்பூன்
* துருவிய கேரட் – 1 1/2 கப்
* வால்நட்ஸ் – 1/2 கப்
செய்முறை:
* முதலில் மைக்ரோஓவனை 180 டிகிரி செல்சியல் சூடேற்றிக் கொள்ள வேண்டும்.
* பின் பிரட் செய்யும் பேனை எடுத்து, அதன் மேல் பார்ச்மென்ட் பேப்பரை விரித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு பௌலில் எண்ணெய், சர்க்கரை, வென்னிலா எசன்ஸ் மற்றும் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு ஒருசேர கலந்து விட வேண்டும்.
* பிறகு மற்றொரு பௌலில் மைதா, பட்டை தூள், பேக்கிங் சோடா மற்றும் உப்பை எடுத்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின் இந்த மைதா கலவையை முட்டை கலவையுடன் சேர்த்து நன்கு கரண்டி கொண்டு பிரட்டி விட வேண்டும்.
* அடுத்து அதில் துருவிய கேரட், வால்நட்ஸ் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* அதன் பின் இந்த மாவை ரெடியாக வைத்துள்ள கேக் பேனில் ஊற்றி, அதன் மேல் வால்நட்ஸ் தூவி, மைக்ரோஓவனில் வைத்து, 50 நிமிடம் முதல் 1 மணிநேரம் வரை பேக் செய்து எடுக்க வேண்டும்.
* இறுதியில் ஓவனில் உள்ள பேனை வெளியே எடுத்து 15 நிமிடம் குளிர வைத்து, பின் கத்தியால் துண்டுகளாக்கினால், சிம்பிளான கேரட் வால்நட் பிரட் தயார்.
IMAGE COURTESY
இந்த பதிவின் மூலமாக சிம்பிளான… கேரட் வால்நட் பிரட் எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி சிம்பிளான… கேரட் வால்நட் பிரட் ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .