Categories: சைவம்

Capsicum Sambar Recipe In Tamil | குடைமிளகாய் சாம்பார்

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான குடைமிளகாய் சாம்பார் ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

குடைமிளகாயில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. இந்த காய்கறி செரிமான பிரச்சனைகள், வயிற்று உப்புசம், நெஞ்செரிச்சல், வயிற்றுப் போக்கு மற்றும் வயிற்றுப் பிடிப்பு போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கக்கூடியது. எனவே அடிக்கடி குடைமிளகாயை உணவில் சேர்த்து வந்தால், பல ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து விலகி இருக்கலாம். குடைமிளகாயை கொண்டு பல சுவையான ரெசிபிக்களை தயாரிக்கலாம். அதில் ஒன்று தான் குடைமிளகாய் சாம்பார். இந்த சாம்பார் சாதத்துடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:

* குடைமிளகாய் – 1-2

* துவரம் பருப்பு – 1/2 கப்

* பெரிய வெங்காயம் – 1

* தக்காளி – 1/2

* புளி – 1 நெல்லிக்காய் அளவு

* பெருங்காயத் தூள் – 1/2 டீஸ்பூன்

* மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

* சாம்பார் பவுடர் – 1 டேபிள் ஸ்பூன்

தாளிப்பதற்கு…

* கடுகு – 1 டீஸ்பூன்

* உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்

* வெந்தயம் – 1 டீஸ்பூன்

* கறிவேப்பிலை – சிறிது

செய்முறை:

* முதலில் வெங்காயம், தக்காளி மற்றும் குடைமிளகாயை நறுக்கிக் கொள்ள வேண்டும்.

* பின் புளியை 1/2 கப் நீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்னர் குக்கரில் துவரம் பருப்பை கழுவிப் போட்டு, போதுமான அளவு நீரை ஊற்றி, மஞ்சள் தூள் சேர்த்து அடுப்பில் வைத்து, 2-3 விசில் விட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம், கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்க வேண்டும்.

* பிறகு வெங்காயத்தைப் போட்டு ஒரு நிமிடம் வதக்கி, அதைத் தொடர்ந்து தக்காளியைப் போட்டு நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.

* அடுத்து அதில் குடைமிளகாயை சேர்த்து 3 நிமிடம் வதக்க வேண்டும்.

* அதன் பின் சாம்பார் பவுடர் மற்றும் உப்பு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, பின் புளியை கையால் பிசைந்து, வடிகட்டி அந்நீரை ஊற்றி கொதிக்க விட வேண்டும்.

* இறுதியாக வேக வைத்துள்ள துவரம் பருப்பை சேர்த்து, தேவையான அளவு நீர் ஊற்றி, உப்பு சேர்த்து, மிதமான தீயில் நன்கு கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான குடைமிளகாய் சாம்பார் தயார்.

Image Courtesy: pavispassion

இந்த பதிவின் மூலமாக குடைமிளகாய் சாம்பார் எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி குடைமிளகாய் சாம்பார் ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

admin

Recent Posts

Pattukkottai Nadiamman Temple Therottam LIVE நாடியம்மன் கோயில் தேரோட்டம்

Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…

2 years ago

Ramaswamy Venkataraman | இரா வெங்கட்ராமன் முன்னாள் குடியரசுத் தலைவர் | ராஜாமடம்

இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…

2 years ago

அன்பு ஒன்றுதான் அனாதை இல்லை | அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் | Social Activist Balamurugan

அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…

2 years ago

முதல் சுயமரியாதைப் போராளி பட்டுக்கோட்டை அஞ்சா நெஞ்சன் அழகிரிசாமி | Pattukkottai Alagiri

Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…

2 years ago

மனோரா கோட்டை பட்டுக்கோட்டை | Manora Fort Pattukkottai

பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…

2 years ago