நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான சிம்பிளான… குடைமிளகாய் பொரியல் ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…
பலருக்கு மதிய வேளையில் பொரியல் இல்லாமல் சாப்பாடே இறங்காது. அத்தகையவர்கள் தினமும் புதுப்புது சுவையில் பொரியலை சாப்பிட விரும்புவார்கள். அந்த வகையில் நாம் கடைகளில் குடைமிளகாயை பார்த்திருப்போம். குடைமிளகாயை உணவில் அதிகம் சேர்ப்பது மிகவும் நல்லது. ஏனெனில் இதில் நோயெதிர்ப்பு சக்திக்கு தேவையான வைட்டமின் சி அதிகம் உள்ளது. இந்த குடைமிளகாயை பலருக்கு எப்படி செய்வதென்று தெரியாது.
எனவே தமிழ் போல்ட் ஸ்கை குடைமிளகாய் கொண்டு செய்யப்படும் ஒரு அற்புதமான எளிய பொரியலை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* குடைமிளகாய் – 2
* தக்காளி – 3
* பெரிய வெங்காயம் – 1
* குழம்பு மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
* சீரகப்பொடி – 1/4 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் – 1/4 டீஸ்பூன்
* கடுகு – 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு – 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை – சிறிது
* எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு – சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் குடைமிளகாயை ஓரளவு நீளத் துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
* பின் வெங்காயம் மற்றும் தக்காளியையும் நறுக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத் தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
* பிறகு வெங்காயத்தைப் போட்டு சிறிது உப்பு தூவி 2 நிமிடம் வதக்கவும்.
* அடுத்து தக்காளியையும் சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கி விடவும்.
* தக்காளி நன்கு வதங்கிய பின், குடைமிளகாயை சேர்த்து, அத்துடன் குழம்பு மிளகாய் தூள், சீரகப் பொடி மற்றும் சிறிது நீர் தெளித்து, மூடி வைத்து 2 நிமிடம் வேக வைத்து இறக்கினால், சுவையான குடைமிளகாய் பொரியல் தயார்.
இந்த பதிவின் மூலமாக சிம்பிளான… குடைமிளகாய் பொரியல் எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி சிம்பிளான… குடைமிளகாய் பொரியல் ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .