நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான Capsicum chicken gravy recipe : குடைமிளகாய் சிக்கன் கிரேவி ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…
இதுவரை நீங்கள் எத்தனையோ ஸ்டைலில் சிக்கன் கிரேவி செய்து சுவைத்திருப்பீர்கள். ஆனால் வைட்டமின் சி அதிகம் நிறைந்த குடைமிளகாயை கொண்டு சிக்கன் கிரேவி செய்ததுண்டா? இல்லையென்றால், இனி முயற்சித்துப் பாருங்கள். இந்த குடைமிளகாய் சிக்கன் கிரேவி சப்பாத்தி, பூரி, நாண், சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும். அதோடு இதன் சுவை சற்று வித்தியாசமாகவும் இருக்கும்.
தேவையான பொருட்கள்:
சிக்கனை வேக வைப்பதற்கு…
* சிக்கன் – 1 கிலோ
* மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு – சுவைக்கேற்ப
* கரம் மசாலா – 1 டேபிள் ஸ்பூன்
* எலுமிச்சை சாறு – 2 டேபிள் ஸ்பூன்
கிரேவிக்கு…
* எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்
* சோம்பு – 1 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் – 2 (நறுக்கியது)
* தக்காளி – 3 (நறுக்கியது)
* பச்சை குடைமிளகாய் – 2 (நறுக்கியது)
* மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
* மல்லித் தூள் – 2 டேபிள் ஸ்பூன்
* கரம் மசாலா – 1 டேபிள் ஸ்பூன்
* தக்காளி கெட்சப் – 1/4 கப்
* உப்பு – சுவைக்கேற்ப
* தண்ணீர் – தேவையான அளவு
* கொத்தமல்லி – சிறிது
செய்முறை:
* முதலில் சிக்கனை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் குக்கரில் சிக்கனுடன், அதை வேக வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களையும் சேர்த்து கிளறி, குக்கரை மூடி குறைவான தீயில் 2 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* குக்கர் விசில் போனதும், குக்கரைத் திறந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து 5 நிமிடம் வதக்கி, தக்காளியை சேர்த்து மீண்டும் 5 நிமிடம் வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின் அதை மிக்சர் ஜாரில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அரைத்த மசாலாவை சேர்த்து கிளறி, 5-10 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* அடுத்து அதில் மசாலா பொடிகள், தக்காளி கெட்சப், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, 5-8 நிமிடம் எண்ணெய் தனியாக பிரியும் வரை நன்கு வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் வேக வைத்துள்ள சிக்கனை நீருடன் சேர்த்து நன்கு கிளறி, வேண்டுமானால் சிறிது நீரையும் ஊற்றி கிளறி, 15 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க வைத்து இறக்கி, மேலே கொத்தமல்லியைத் தூவினால், குடைமிளகாய் சிக்கன் கிரேவி தயார்.
இந்த பதிவின் மூலமாக Capsicum chicken gravy recipe : குடைமிளகாய் சிக்கன் கிரேவி எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி Capsicum chicken gravy recipe : குடைமிளகாய் சிக்கன் கிரேவி ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை Agricultural Technology Management Agency ATMA : அட்மா திட்டம் தமிழ்நாட்டில் 2005-06 ஆம்…
Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…
இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…
அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…
Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…
பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…