நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான முட்டைக்கோஸ் வடை ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…
மழை பெய்யும் போது, நன்கு சூடாகவும், மொறுமொறுப்பாகவும் ஏதாவது சாப்பிட தோன்றும். குறிப்பாக பலருக்கு வடை சாப்பிட ஆசையாக இருக்கும். தினமும் ஒரே மாதிரி வடை செய்து சுவைத்து அலுத்துப் போயிருக்கும். சற்று வித்தியாசமான வடை சாப்பிட வேண்டுமானால், முட்டைக்கோஸ் கொண்டு வடை செய்யுங்கள். இந்த வடை மிகவும் சுவையாக இருப்பதோடு, விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.
தேவையான பொருட்கள்:
* உளுத்தம் பருப்பு – 1.5 கப்
* முட்டைக்கோஸ் – 2 கப் (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகா – 2 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி – 2 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை – ஒரு கையளவு
* உப்பு – சுவைக்கேற்ப
* எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் உளுத்தம் பருப்பை நீரில் 2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* பின் அதை நன்கு கழுவி, பிளெண்டரில் போட்டு தேவையான நேரத்தில் லேசாக நீர் தெளித்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். அளவுக்கு அதிகமாக நீரை சேர்த்து விட வேண்டாம்.
* பின்பு ஒரு பௌலில் அரைத்த உளுத்தம் மாவு, முட்டைக்கோஸ், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* எண்ணெய் சூடானதும், நீரில் கையை நனைத்து, சிறிது மாவை எடுத்து, அதன் நடுவே ஒரு துளையிட்டு எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், முட்டைக்கோஸ் வடை தயார்.
இந்த பதிவின் மூலமாக முட்டைக்கோஸ் வடை எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி முட்டைக்கோஸ் வடை ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .