நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான மோர் ஃப்ரைடு சிக்கன் ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…
இந்த வார விடுமுறையன்று உங்கள் வீட்டில் சிக்கன் வாங்க போகிறீர்களா? சிக்கன் வாங்கினால் நிச்சயம் வீட்டில் ஃப்ரைடு சிக்கன் செய்வோம். ஆனால் சில சமயங்களில் ஃப்ரைடு சிக்கன் மென்மையாக இல்லாமல் இருக்கும். இந்நிலையில் சிக்கன் மென்மையாக இருப்பதற்கு தயிர் சேர்ப்போம். ஆனால் ஃப்ரைடு சிக்கனிலேயே பல வெரைட்டிகள் உள்ளன. அதில் ஒன்று தான் மோர் ஃப்ரைடு சிக்கன். இந்த சிக்கன் நன்கு மென்மையாக, அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் சுவையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
* சிக்கன் – 1 கிலோ
* எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு
ஊற வைப்பதற்கு…
* மோர் – 2 கப்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டேபிள் ஸ்பூன்
* உப்பு – சுவைக்கேற்ப
* மிளகுத் தூள் – சுவைக்கேற்ப
* கரம் மசாலா – 1 டீஸ்பூன்
கோட்டிங்கிற்கு…
* மைதா – 2 கப்
* உப்பு – சுவைக்கேற்ப
* மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு பௌலில் சிக்கனை எடுத்து, அதில் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து பிரட்டி ஃப்ரிட்ஜில் வைத்து 3-4 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* சிக்கன் நன்கு ஊறியதும் ஃப்ரிட்ஜில் இருந்து வெளியே எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு தட்டில் மைதா, உப்பு, மிளகாய் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு ஒவ்வொரு சிக்கன் துண்டுகளையும் எடுத்து தட்டில் உள்ள மாவில் நன்கு பிரட்டி, ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். இதேப் போன்று அனைத்து சிக்கன் துண்டுகளையும் மாவில் பிரட்டி வைத்துக் கொள்ள வேண்டும். 10 நிமிடம் சிக்கனை அப்படியே ஊற வைக்க வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், சிக்கன் துண்டுகளைப் போட்டு மிதமான தீயில் வைத்து 15 நிமிடம் வேக வைத்து, பின் எடுக்க வேண்டும். இப்போது சுவையான மோர் ஃப்ரைடு சிக்கன் தயார்.
இந்த பதிவின் மூலமாக மோர் ஃப்ரைடு சிக்கன் எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி மோர் ஃப்ரைடு சிக்கன் ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .