நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான பட்டர் பீன்ஸ் குருமா ரெசிப்பி (Butter Beans Kurma Recipe) செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…
சப்பாத்தி, பூரி, இட்லி, தோசை போன்றவற்றிற்கு பட்டர் பீன்ஸ் குருமா அட்டகாசமாக இருக்கும். அதோடு இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் மிகவும் சுவையாகவும் இருக்கும். முக்கியமாக பட்டர் பீன்ஸ் குருமா செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருப்பதால், பேச்சுலர்கள் கூட இதை முயற்சிக்கலாம்.
* பட்டர் பீன்ஸ் – 1 கப்
* பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
* மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் – 1 1/2 டீஸ்பூன்
* கொத்தமல்லி – சிறிது
* உப்பு – சுவைக்கேற்ப
* எண்ணெய் – 3 டீஸ்பூன்
* கிராம்பு – 2
* பட்டை – 1/2 இன்ச்
* பூண்டு – 5 (பொடியாக நறுக்கியது)
* தேங்காய் – 3/4 கப்
* முந்திரி – 3
* சோம்பு – 1 டீஸ்பூன்
* கசகசா – 1 டீஸ்பூன்
* பொட்டுக்கடலை – 1 டீஸ்பூன்
* முதலில் பட்டர் பீன்ஸின் தோலை நீக்கி, தனியாக வைத்துக் கொள்ளுங்கள். பின் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸர் ஜாரில் போட்டு, சிறிது நீர் ஊற்றி, நன்கு பேஸ்ட் செய்து கொள்ளுங்கள்.
* பின்பு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்கவும்.
* பின் அதில் வெங்காயத்தைப் போட்டு வதக்கி, தக்காளியை சேர்த்து பச்சை வாசனை போக நன்கு மென்மையாக வதக்கவும்.
* பிறகு மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
* அடுத்து அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்ட்டை சேர்த்து, 2 கப் நீர் ஊற்றி, மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.
* பின்பு எண்ணெய் தனியாக பிரியும் வரை நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், பட்டர் பீன்ஸை சேர்த்து, குக்கரை மூடி குறைவான தீயில் 2 விசில் விட்டு இறக்கவும்.
* இறுதியில் குக்கரைத் திறந்து, கொத்தமல்லியைத் தூவினால், சுவையான பட்டர் பீன்ஸ் குருமா ரெடி!
இந்த பதிவின் மூலமாக பட்டர் பீன்ஸ் குருமா எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி பட்டர் பீன்ஸ் குருமா ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை Agricultural Technology Management Agency ATMA : அட்மா திட்டம் தமிழ்நாட்டில் 2005-06 ஆம்…
Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…
இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…
அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…
Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…
பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…