நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான கத்திரிக்காய் சட்னி ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…
உங்கள் வீட்டில் உள்ளோர் இட்லி, தோசைக்கு வித்தியாசமான சட்னி செய்யுமாறு சொல்கிறார்களா? என்ன சட்னி செய்வதென்று தெரியவில்லையா? உங்கள் வீட்டில் கத்திரிக்காய் உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு ஒரு சுவையான கத்திரிக்காய் சட்னியை செய்யுங்கள். இந்த கத்திரிக்காய் சட்னி இட்லி, தோசைக்கு மிகவும் அட்டகாசமாக இருக்கும். அதோடு இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையிலும் இருக்கும்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் – 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் – 3
* பூண்டு – 4 பல் (நறுக்கியது)
* பெரிய கத்திரிக்காய் – 1 (நறுக்கியது)
* மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
* உப்பு – சுவைக்கேற்ப
* புளி – 1 சிறிய அளவு
* தண்ணீர் – தேவையான அளவு
* சர்க்கரை – 1 டேபிள் ஸ்பூன்
தாளிப்பதற்கு…
* நல்லெண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
* கடுகு – 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை
* கறிவேப்பிலை – சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், உளுத்தம் பருப்பு, வரமிளகாய், பூண்டு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி இறக்கி, மிக்சர் ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அதே வாணலியில் கத்திரிக்காய் சேர்த்து, சிறிது உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி, புளியை சேர்த்து நன்கு வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்பு அதையும் பூண்டு அரைத்த மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன் சர்க்கரையை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அடுத்து, அரைத்து வைத்துள்ள சட்னியை சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான கத்திரிக்காய் சட்னி தயார்.
இந்த பதிவின் மூலமாக கத்திரிக்காய் சட்னி எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி கத்திரிக்காய் சட்னி ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை Agricultural Technology Management Agency ATMA : அட்மா திட்டம் தமிழ்நாட்டில் 2005-06 ஆம்…
Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…
இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…
அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…
Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…
பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…