நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான Beetroot Chutney Recipe : பீட்ரூட் சட்னி ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…
பீட்ரூட்டை உணவில் அதிகம் சேர்ப்பதால், உடலில் இரத்தத்தின் அளவு அதிகரிக்கும். ஏனெனில் பீட்ருட்டில் இரும்புச்சத்து உள்ளது. இன்று உங்கள் வீட்டில் இட்லி அல்லது தோசை செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அதற்கு சற்று வித்தியாசமான சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் பீட்ரூட் உள்ளதா? அப்படியானால் அந்த பீட்ரூட்டைக் கொண்டு ஒரு சுவையான சட்னி செய்யுங்கள். இந்த பீட்ரூட் சட்னி இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
* பீட்ரூட் – 1 1/2 கப் (நறுக்கியது)
* துருவிய தேங்காய் – 1/4 கப்
வறுத்து அரைப்பதற்கு…
* எண்ணெய் – 2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்
* கடலை பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் – 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் – 2
* பூண்டு – 2 பல்
* புளி – 1 துண்டு
தாளிப்பதற்கு…
* எண்ணெய் – 2 டீஸ்பூன்
* கடுகு – 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை – சிறிது
* பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை
செய்முறை:
* முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து பொன்னிறமாக வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின் அதே வாணலியில் பீட்ரூட்டை சேர்த்து, சிறிது உப்பு தூவி 3-5 நிமிடம் வதக்கி, மூடி வைத்து 5 நிமிடம் வேக வைத்து, பின் அதில் தேங்காய் மற்றும் பிற வறுத்த பொருட்களையும் சேர்த்து வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* வதக்கிய பொருட்கள் நன்கு குளிர்ந்ததும், அதை மிக்சர் ஜாரில் போட்டு, சிறிது நீர் ஊற்றி நன்கு அரைக்க வேண்டும். பின் அரைத்த சட்னியை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து சட்னியுடன் சேர்த்து நன்கு கிளறினால், பீட்ரூட் சட்னி தயார்.
Image Courtesy: sharmispassions
இந்த பதிவின் மூலமாக Beetroot Chutney Recipe : பீட்ரூட் சட்னி எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி Beetroot Chutney Recipe : பீட்ரூட் சட்னி ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை Agricultural Technology Management Agency ATMA : அட்மா திட்டம் தமிழ்நாட்டில் 2005-06 ஆம்…
Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…
இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…
அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…
Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…
பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…