நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான பாசந்தி ரெசிபி : பாரம்பரிய பாசந்தி செய்முறை ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…
பாசுந்தி சுவை மிகுந்த நமது நாட்டின் புகழ்பெற்ற இனிப்பு வகை ஆகும். இது கர்நாடக, மகாராஷ்டிரா மற்றும் குஜராத் போன்ற மாநிலங்களில் எல்லா சுப நிகழ்ச்சிகள் மற்றும் பண்டிகையின் போது இதை செய்து மகிழ்வர். பாசுந்தி என்பது பாலை பாதியாக சுண்ட காய்ச்சி அதில் சர்க்கரை மற்றும் ஏலக்காய், உலர்ந்த பழங்கள் போட்டு செய்யப்படும் இனிப்பு வகை யாகும்.
இது பொதுவாக எல்லா பண்டிகையின் போது செய்யப்பட்டாலும் குஜராத் கல்யாண நிகழ்ச்சிகளில் இது மிகவும் முக்கியமான இனிப்பு வகையாக உள்ளது.
இந்த ரெசிபியை மிகவும் வேகமாகவும் எளிதாகவும் குறைந்த சமையல் நேரத்திலேயே செய்து விடலாம். எனவே இதை எப்பொழுதும் பார்டி சமயத்திலும் இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த மான ஸ்வீட் என்பதால் அவர்களுக்கு மாலை நேர ஸ்நாக்ஸ் ஆகவும் செய்து கொடுக்கலாம். இதை உங்கள் குழந்தைகளின் பிறந்த நாள் நிகழ்ச்சிகளின் போதும் செய்து கொடுத்தால் எல்லா குழந்தைகளும் விரும்பி சாப்பிட்டு மகிழ்வர். இந்த இனிப்பு கண்டிப்பாக உங்கள் இனிப்பு சுவை தாகத்திற்கு விருந்தாகும்.
சரி வாங்க இதை எப்படி வீட்டிலேயே செய்யலாம் என்பதை செய்முறை விளக்க படத்துடனும் மற்றும் வீடியோ மூலமும் காணலாம்
Recipe By: மீனா பந்தரி
Recipe Type: ஸ்வீட்ஸ்
Serves: 2
க்ரீம் மில்க் – 1/2 லிட்டர்
சர்க்கரை – 3 டேபிள் ஸ்பூன்
நறுக்கிய முந்திரி பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் பொடி – 1/2 டேபிள் ஸ்பூன்
1. நல்ல கனமான அடியுள்ள பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் பாலை ஊற்ற வேண்டும்.
2. பால் நன்றாக கொதிக்கும் வரை சூடுபடுத்தி அடிப்பகுதியில் பிடிக்காத வண்ணம் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்
3. பால் பாதியளவு ஆகும் வரை சுண்டக் காய்ச்ச வேண்டும்
4. இப்பொழுது சர்க்கரையை சேர்த்து 2-3 நிமிடங்கள் நன்றாக கிளறி விடவும்
5. பிறகு நறுக்கிய பாதாம் பருப்பு மற்றும் முந்திரி பருப்பு சேர்க்க வேண்டும்
6. நன்றாக கலக்கவும்
7. அடுப்பை அணைப்பதற்கு கொஞ்சம் நேரம் முன்னாடி ஏலக்காய் பொடி சேர்த்து பரிமாறவும்.
1. நல்ல கனமான அடியுள்ள பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் பாலை ஊற்ற வேண்டும்.
2. பால் நன்றாக கொதிக்கும் வரை சூடுபடுத்தி அடிப்பகுதியில் பிடிக்காத வண்ணம் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்
3. பால் பாதியளவு ஆகும் வரை சுண்டக் காய்ச்ச வேண்டும்
4. இப்பொழுது சர்க்கரையை சேர்த்து 2-3 நிமிடங்கள் நன்றாக கிளறி விடவும்
5. பிறகு நறுக்கிய பாதாம் பருப்பு மற்றும் முந்திரி பருப்பு சேர்க்க வேண்டும்
6. நன்றாக கலக்கவும்
7. அடுப்பை அணைப்பதற்கு கொஞ்சம் நேரம் முன்னாடி ஏலக்காய் பொடி சேர்த்து பரிமாறவும்.
இந்த பதிவின் மூலமாக பாசந்தி ரெசிபி : பாரம்பரிய பாசந்தி செய்முறை எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி பாசந்தி ரெசிபி : பாரம்பரிய பாசந்தி செய்முறை ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை Agricultural Technology Management Agency ATMA : அட்மா திட்டம் தமிழ்நாட்டில் 2005-06 ஆம்…
Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…
இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…
அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…
Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…
பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…