Categories: சைவம்

Diwali Special Sweet Banana Halwa Recipe In Tamil | தீபாவளி ஸ்பெஷல் வாழைப்பழ அல்வா

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான தீபாவளி ஸ்பெஷல்: வாழைப்பழ அல்வா (Banana Halwa) ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

தீபாவளி பண்டிகையின் போது உங்கள் வீட்டில் பலகாரம் செய்வீர்களா? இந்த வருட தீபாவளி பண்டிகைக்கு இதுவரை செய்திராத ஒரு ஸ்வீட் செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் வாழைப்பழத்தைக் கொண்டு ஒரு ஸ்வீட் செய்யுங்கள். அது தான் வாழைப்பழ அல்வா. உங்கள் வீட்டில் உள்ளோருக்கு அல்வா மிகவும் பிடிக்குமானால், அவர்களுக்கு வாழைப்பழத்தைக் கொண்டு அல்வா செய்து கொடுங்கள். இந்த வாழைப்பழ அல்வா நிச்சயம் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.

தேவையான பொருட்கள்:

* வாழைப்பழம் – 5 மசித்தது அல்லது அரைத்தது

* சர்க்கரை – 1/4 கப் + 1 கப்

* நெய் – 1/2 கப் முதல் 3/4 கப்

* ஏலக்காய் பொடி – 1 டீஸ்பூன்

* தண்ணீர் – 1/4 கப்

* பாதாம், முந்திரி, திராட்சை – தேவையான அளவு

Banana Halwa செய்முறை:

* முதலில் ஒரு பேனில் நெய் தடவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்னர் ஒரு நாண்ஸ்டிக் பேனில் 2 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், அதில் அரைத்த அல்லது மசித்த வாழைப்பழத்தை சேர்த்து கிளறி, 1/4 கப் சர்க்கரை சேர்த்து நன்கு வெந்து ஓரளவு கெட்டியாகும் வரை கிளறி விட வேண்டும்.

* அதே வேளையில் ஒரு பாத்திரத்தில் ஒரு கப் சர்க்கரை மற்றும் 1/4 கப் நீரை ஊற்றி கிளறி கொதிக்க வைக்க வேண்டும். சர்க்கரை பாகானது கேரமல் நிலைக்கு/ப்ரௌன் நிறத்தில் மாறி வரும் போது, அதில் வாழைப்பழத்தை சேர்த்து கிளறி தொடர்ந்து கிளறி விட வேண்டும்.

* அப்போது அதில் தேவையான அளவு நெய் ஊற்றி கிளறி விட வேண்டும்.

* அதே வேளையில், ஒரு வாணலியை மற்றொரு அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், பாதாம், முந்திரி, உலர் திராட்சை சேர்த்து வறுத்து அல்வாவில் ஊற்றி கிளறி, அத்துடன் ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

* பிறகு அதை இறக்கி, நெய் தடவிய பேனில் ஊற்றி பரப்பி, குளிர வைத்து, பின் அதை துண்டுகளாக்கினால், சுவையான வாழைப்பழ அல்வா தயார்.

இந்த பதிவின் மூலமாக தீபாவளி ஸ்பெஷல்: வாழைப்பழ அல்வா எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி தீபாவளி ஸ்பெஷல்: வாழைப்பழ அல்வா ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

admin

Recent Posts

Pattukkottai Nadiamman Temple Therottam LIVE நாடியம்மன் கோயில் தேரோட்டம்

Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…

2 years ago

Ramaswamy Venkataraman | இரா வெங்கட்ராமன் முன்னாள் குடியரசுத் தலைவர் | ராஜாமடம்

இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…

2 years ago

அன்பு ஒன்றுதான் அனாதை இல்லை | அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் | Social Activist Balamurugan

அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…

2 years ago

முதல் சுயமரியாதைப் போராளி பட்டுக்கோட்டை அஞ்சா நெஞ்சன் அழகிரிசாமி | Pattukkottai Alagiri

Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…

2 years ago

மனோரா கோட்டை பட்டுக்கோட்டை | Manora Fort Pattukkottai

பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…

2 years ago