Categories: சைவம்

Paruppu Usili Recipe | ஆந்திரா ஸ்டைல் கடலைப் பருப்பு உசிலி ரெசிபி

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான ஆந்திரா ஸ்டைல் கடலைப் பருப்பு உசிலி ரெசிபி ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

ஆந்திரா ரெசிபிக்கள் அனைத்தும் காரமாகவும், தனிச் சுவையுடனும் இருக்கும். அதில் ஒன்று கடலைப்பருப்பு உசிலி அல்லது படோலி என்னும் சைடு டிஷ். இது கடலைப் பருப்பைக் கொண்டு செய்யப்படும் ஒரு சுவையான ரெசிபி. இது ரொட்டி, புல்கா மற்றும் சாதத்துடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். கடலைப் பருப்பில் புரோட்டீன் அதிகம் உள்ளதால், இது ஆரோக்கியமான ரெசிபியும் கூட.

இந்த ஆந்திரா கடலைப் பருப்பு உசிலி ரெசிபியை உங்கள் வீட்டில் செய்ய நினைக்கிறீர்களா? கீழே ஆந்திரா ஸ்டைல் கடலைப்பருப்பு உசிலி எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* கடலை பருப்பு – 1 கப்

* பச்சை மிளகாய் – 1

தாளிப்பதற்கு…

* கடுகு – 1 டீபூன்

* உளுத்தம் பருப்பு – 1 டீபூன்

* சீரகம் – 1 டீபூன்

* கறிவேப்பிலை – சிறிது

* பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை

* வெங்காயம் – 1 (நறுக்கியது)

* இஞ்சி பூண்டு விழுது – 1 டீபூன்

* மிளகாய் தூள் – 1 டேபிள் பூன்

* மஞ்சள் தூள் – 1/2 டீபூன்

* உப்பு – சுவைக்கேற்ப

* எண்ணெய் – 1 டேபிள் பூன்

செய்முறை:

* முதலில் கடலைப் பருப்பை சுடுநீரில் போட்டு 30 நிமிடம் ஊற வைக்கவும்.

* பின் கடலைப் பருப்பைக் கழுவி, அதை மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன் பச்சை மிளகாய் மற்றும் சிறிது நீர் சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்கவும்.

* பிறகு கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வாக்கவும்.

* பின் அரைத்த கடலைப் பருப்பை சேர்த்து கிளறவும். அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி விட்டு இறக்கினால், ஆந்திரா ஸ்டைல் கடலைப் பருப்பு உசிலி ரெசிபி தயார்.

Image Courtesy: archanaskitchen

இந்த பதிவின் மூலமாக ஆந்திரா ஸ்டைல் கடலைப் பருப்பு உசிலி ரெசிபி எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி ஆந்திரா ஸ்டைல் கடலைப் பருப்பு உசிலி ரெசிபி ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

admin

Recent Posts

Pattukkottai Nadiamman Temple Therottam LIVE நாடியம்மன் கோயில் தேரோட்டம்

Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…

2 years ago

Ramaswamy Venkataraman | இரா வெங்கட்ராமன் முன்னாள் குடியரசுத் தலைவர் | ராஜாமடம்

இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…

2 years ago

அன்பு ஒன்றுதான் அனாதை இல்லை | அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் | Social Activist Balamurugan

அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…

2 years ago

முதல் சுயமரியாதைப் போராளி பட்டுக்கோட்டை அஞ்சா நெஞ்சன் அழகிரிசாமி | Pattukkottai Alagiri

Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…

2 years ago

மனோரா கோட்டை பட்டுக்கோட்டை | Manora Fort Pattukkottai

பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…

2 years ago