Categories: அசைவம்

Andhra chilli chicken recipe | ஆந்திரா ஸ்டைல் க்ரீன் சில்லி சிக்கன் ரெசிபி

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான ஆந்திரா ஸ்டைல் க்ரீன் சில்லி சிக்கன் ரெசிபி ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

இந்த வார விடுமுறையில் நீங்கள் ஒரு வித்தியாசமான சிக்கன் ரெசிபியை செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால் ஆந்திரா ஸ்டைல் க்ரீன் சில்லி சிக்கன் செய்யுங்கள். இது சற்று காரமாக இருந்தாலும், மிகவும் சுவையாக இருக்கும். இந்த க்ரீன் சில்லி சிக்கனை ரசம் சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும்.

MOST READ: கர்நாடகா ஸ்டைல் சிக்கன் கிரேவி

தேவையான பொருட்கள்:

ஊற வைப்பதற்கு…

* சிக்கன் – 250 கிராம்

* தயிர் – 2 டேபிள் ஸ்பூன்

* இஞ்சி விழுது – 1 டேபிள் ஸ்பூன்

* பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன்

* பச்சை மிளகாய் விழுது – 1 டேபிள் ஸ்பூன்

* மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

பச்சை மசாலாவிற்கு…

* கொத்தமல்லி – 1/2 கப்

* சீரகம் – 1/2 டீஸ்பூன்

* கறிவேப்பிலை – சிறிது

தாளிப்பதற்கு…

* நெய் – 1 டேபிள் ஸ்பூன்

* வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

* பச்சை மிளகாய் – 3

* கறிவேப்பிலை – சிறிது

* சோயா சாஸ் – 1 டேபிள் ஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

செய்முறை:

* முதலில் சிக்கனை நன்கு நீரில் கழுவி, நீரை முற்றிலும் வடிகட்டிவிட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின் அந்த சிக்கனில் தயிர், இஞ்சி, பூண்டு விழுது, பச்சை மிளகாய் விழுது, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு பிரட்டி, ஃப்ரிட்ஜில் வைத்து குறைந்தது 1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.

* அதே சமயம் மிக்சர் ஜாரில் கொத்தமல்லி இலைகள் மற்றும் கறிவேப்பிலையைப் போட்டு, சிறிது சீரகத்தையும் போட்டு நீர் தெளித்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், கறிவேப்பிலை, வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.

* பிறகு அதில் சோயா சாஸ் மற்றும் அரைத்த பச்சை மசாலாவை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். வேண்டுமானால் சிறிது உப்பு தூவி, சிக்கனை நன்கு வேக வைக்கவும். சிக்கன் நன்கு வெந்ததும், அதில் சிறிது கொத்தமல்லியைத் தூவி கிளறினால், சுவையான ஆந்திரா ஸ்டைல் க்ரீன் சில்லி சிக்கன் ரெசிபி தயார்.

Image Courtesy: archanaskitchen

இந்த பதிவின் மூலமாக ஆந்திரா ஸ்டைல் க்ரீன் சில்லி சிக்கன் ரெசிபி எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி ஆந்திரா ஸ்டைல் க்ரீன் சில்லி சிக்கன் ரெசிபி ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

admin

Recent Posts

Pattukkottai Nadiamman Temple Therottam LIVE நாடியம்மன் கோயில் தேரோட்டம்

Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…

2 years ago

Ramaswamy Venkataraman | இரா வெங்கட்ராமன் முன்னாள் குடியரசுத் தலைவர் | ராஜாமடம்

இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…

2 years ago

அன்பு ஒன்றுதான் அனாதை இல்லை | அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் | Social Activist Balamurugan

அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…

2 years ago

முதல் சுயமரியாதைப் போராளி பட்டுக்கோட்டை அஞ்சா நெஞ்சன் அழகிரிசாமி | Pattukkottai Alagiri

Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…

2 years ago

மனோரா கோட்டை பட்டுக்கோட்டை | Manora Fort Pattukkottai

பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…

2 years ago