நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான ஆந்திரா ஸ்பெஷல் பச்சை மாங்காய் தால் ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…
கோடைக்காலத்தில் மாங்காய் சீசன் என்பதால், எங்கு பார்த்தாலும் மாங்காய் விலைக் குறைவில் கிடைப்பதைக் காண்போம். அப்படி கிடைக்கும் மாங்காயைக் கொண்டு பல ரெசிபிக்களைத் தயாரித்து சுவைக்கலாம். அதுவும் மாங்காய் கொண்டு அட்டகாசமான சுவையில் ஆந்திரா ரெசிபியை செய்யலாம். அது தான் பச்சை மாங்காய் தால். இந்த தால் மதிய வேளையில் சாதத்துடன் சேர்த்து சாப்பிட மிகவும் சூப்பராக இருக்கும். மேலும் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.
தேவையான பொருட்கள்:
தால் செய்வதற்கு…
* பச்சை மிளகாய் – 2 (நீளமாக கீறியது)
* துவரம் பருப்பு – 1 கப்
* மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
* உப்பு – சுவைக்கேற்ப
மாங்காய் சமைப்பதற்கு…
* மாங்காய் – 1 (தோலுரித்து துண்டுகளாக்கவும்)
* மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
* தண்ணீர் – 1/2 கப்
* உப்பு – சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு…
* நெய் – 1 டீஸ்பூன்
* கடுகு – 1/2 டீஸ்பூன்
* பூண்டு – 2 பற்கள்
* வரமிளகாய் – 2
* கறிவேப்பிலை – சிறிது
* கொத்தமல்லி – சிறிது
செய்முறை:
* முதலில் மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளுங்கள்.
* பின் ஒரு குக்கரில் துவரம் பருப்பை கழுவிப் போட்டு, அத்துடன் 2 கப் நீர், உப்பு, மஞ்சள் தூள் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 4 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். விசில் போனதும் குக்கரைத் திறந்து கொள்ள வேண்டும்.
* அதன் பின் ஒரு மத்து அல்லது கரண்டியால் பருப்பை மசித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் மாங்காயை சமைப்பதற்கு, குக்கரில் மாங்காய் துண்டுகளைப் போட்டு, அத்துடன் சிறிது உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் 1/2 கப் நீர் ஊற்றி அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். பின் விசில் போனதும் குக்கரைத் திறந்து கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், கடுகு, வரமிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் பூண்டுகளை தட்டிப் போட்டு, லேசாக நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.
* அதன் பின் கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, வேக வைத்துள்ள மாங்காய் மற்றும் துவரம் பருப்பை சேர்த்து, தேவையான அளவு நீர் ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து 3-4 நிமிடம் நன்கு கொதிக்க வைத்து இறக்கி கொத்தமல்லியைத் தூவினால், சுவையான ஆந்திரா பச்சை மாங்காய் தால் தயார்.
Image Courtesy: archanaskitchen
இந்த பதிவின் மூலமாக ஆந்திரா ஸ்பெஷல் பச்சை மாங்காய் தால் எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி ஆந்திரா ஸ்பெஷல் பச்சை மாங்காய் தால் ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை Agricultural Technology Management Agency ATMA : அட்மா திட்டம் தமிழ்நாட்டில் 2005-06 ஆம்…
Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…
இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…
அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…
Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…
பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…