Categories: அசைவம்

Almond Chicken Recipe In Tamil | பாதாம் சிக்கன்

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான பாதாம் சிக்கன் ரெசிப்பி (Almond Chicken Recipe) செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

நீங்கள் சிக்கன் பிரியரா? விடுமுறை நாட்களில் சிக்கனை பலவாறு சமைத்து சாப்பிட விரும்புவீர்களா? இந்த வார விடுமுறையில் சிக்கனைக் கொண்டு என்ன சமைக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் பாதாம் சிக்கன் செய்து சாப்பிடுங்கள். இந்த பாதாம் சிக்கன் சப்பாத்தி, பூரி, புலாவ், பரோட்டா போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:

* சிக்கன் – 1/2 கிலோ

* தயிர் – 1/2 கப்

* பாதாம் – 15

* முந்திரி – 10

* பச்சை மிளகாய் – 3

* வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)

* இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்

* பட்டை – 1 துண்டு

* கிராம்பு – 3

* ஏலக்காய் – 2

* சோம்பு – 1 டீஸ்பூன்

* பிரஷ் க்ரீம்/தேங்காய் பால் – 1/2 கப்

* மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்

* கரம் மசாலா தூள் – 1 டேபிள் ஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

* கொத்தமல்லி – சிறிது

Almond Chicken Recipe செய்முறை:

* முதலில் பாதாம், முந்திரி மற்றும் பச்சை மிளகாயை நீரில் 5-10 நிமிடம் ஊற வைத்து, பின் அதை நன்கு மென்மையாக அரைத்து பேஸ்ட் செய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.

* பின்பு அதில் வெங்காயத்தை சேர்த்து சிறிது நேரம் வதக்கி, பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

* பிறகு அதில் அரைத்த முந்திரி பாதாம் விழுது, கரம் மசாலா தூள் சேர்த்து கிளறி, அதன் பின் 1/4 கப் நீரை ஊற்றி குறைவான தீயில் 10 நிமிடம் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

* அதன் பின்னர் சிக்கன் துண்டுகள் மற்றும் தயிர் சேர்த்து 5 நிமிடம் நன்கு வேக வைக்க வேண்டும்.

* பின்பு பிரஷ் க்ரீம்/தேங்கால் பால், சுவைக்கேற்ப உப்பு, தேவையான அளவு நீர், மிளகுத் தூள் சேர்த்து கிளறி, சிக்கனை நன்கு வேக வைக்க வேண்டும். சிக்கன் நன்கு வெந்ததும், அதை இறக்கி, மேலே கொத்தமல்லியைத் தூவினால், பாதாம் சிக்கன் தயார்.

இந்த பதிவின் மூலமாக பாதாம் சிக்கன் எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி பாதாம் சிக்கன் ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

admin

Recent Posts

Pattukkottai Nadiamman Temple Therottam LIVE நாடியம்மன் கோயில் தேரோட்டம்

Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…

2 years ago

Ramaswamy Venkataraman | இரா வெங்கட்ராமன் முன்னாள் குடியரசுத் தலைவர் | ராஜாமடம்

இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…

2 years ago

அன்பு ஒன்றுதான் அனாதை இல்லை | அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் | Social Activist Balamurugan

அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…

2 years ago

முதல் சுயமரியாதைப் போராளி பட்டுக்கோட்டை அஞ்சா நெஞ்சன் அழகிரிசாமி | Pattukkottai Alagiri

Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…

2 years ago

மனோரா கோட்டை பட்டுக்கோட்டை | Manora Fort Pattukkottai

பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…

2 years ago