நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான Agar Agar Milk Sarbath Recipe : அகர் அகர் பால் சர்பத் ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…
மண்டையைப் பிளக்கும் வகையில் வெயில் கொளுத்திக் கொண்டிருக்கிறது. இப்படி கொளுத்தும் வெயிலின் போது பலருக்கும் அதிகப்படியான தாகம் எடுக்கும் மற்றும் உடல் அதிக வெப்பமாகும். இப்படி உடல் வெப்பம் அதிகரிக்கும் போது, உடல் சூட்டைக் குறைக்க ஒருசில பானங்களைக் குடிப்பதே சிறந்த வழி. அந்த வகையில் உடல் சூட்டைக் குறைக்கும் ஓர் சுவையான பானம் தான் அகர் அகர் பால் சர்பத். இந்த பால் சர்பத் செய்வது மிகவும் சுலபம். அதோடு இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி குடிக்கும் வகையில் இருக்கும்.
தேவையான பொருட்கள்:
* அகர் அகர் – 5 கிராம்
* தண்ணீர் – 1 கப்
* குளிர்ந்த பால் – 500 மிலி
* சர்பத் – தேவையான அளவு
செய்முறை:
* முதலில் அகர் அகரை குளிர்ந்த நீரில் சில நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.
* பின் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் ஊற வைத்த அகர் அகரை நீருடன் சேர்த்து கரண்டியால் கிளறி விட்டு உருக்க வேண்டும்.
* பின்பு அதை இறக்கி ஒரு பௌலில் ஊற்றி அறை வெப்பநிலைக்கு வந்ததும், அதை ஃப்ரிட்ஜில் வைத்து ஜெல்லி போன்று ஆனதும் வெளியே எடுத்து, அதை உதிர்த்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு டம்ளரில் உதிர்த்த ஜெல்லியைப் போட்டு, அதில் தேவையான அளவு சர்பத்தை ஊற்றி, குளிர்ந்த பாலை சேர்த்து நன்கு கிளறினால், சுவையான அகர் அகர் பால் சர்பத் தயார்.
இந்த பதிவின் மூலமாக Agar Agar Milk Sarbath Recipe : அகர் அகர் பால் சர்பத் எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி Agar Agar Milk Sarbath Recipe : அகர் அகர் பால் சர்பத் ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .