செய்திகள்

’கனவு நாயகன்’ அப்துல் கலாம் அவர்களுக்கு அருங்காட்சியகம் திறப்பு! – Kalam Smriti International Museum

Kerala Opens Museum Dedicated to Dr.A.P.J.Abdul Kalam – First of its kind in South India.
Kerala gave a fitting tribute to India’s former President Dr. A P J Abdul Kalam by opening a museum dedicated to him in Thiruvananthapuram yesterday. Named ‘Dr. Kalam Smriti International Science & Space Museum’, it is the first of its kind in South India and houses the missile man’s personal memorabilia such as rare photographs, miniature rocket models, satellites, etc. Inaugurated by former ISRO chairman Dr. K Radhakrishnan, the museum has a gallery full of Kalam’s quotes intended to inspire the youth.
ஏவுகணை நாயகன் அப்துல் கலாம்  அவர்களுக்கு  முதல் முறையாக அருங்காட்சியகம் திறப்பு!
தென்னிந்தியாவில் முதல் முறையாக கலாம் அருங்காட்சியகம் கேரளாவில் திறக்கப்பட்டுள்ளது.
முன்னாள் குடியரசுத் தலைவரும், விண்வெளி அறிவியலருமான ஏபிஜே அப்துல் கலாமின் நினைவாக கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய அருங்காட்சியகம் இன்று திறக்கப்பட்டுள்ளது. கலாமின் கோட்பாடுகளை விளக்கும் அமைப்பான டாக்டர் கலாம் ஸ்மிருதி இண்டர்நேஷனல் மூலமாக இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த விண்வெளி அருங்காட்சியகத்திற்கு ‘டாக்டர் கலாம் ஸ்மிருதி சர்வதேச அறிவியல் மற்றும் விண்வெளி அருங்காட்சியகம்’ என்று பெயரிட்டுள்ளனர்.
இஸ்ரோவின் முன்னாள் தலைவர் டாக்டர் கே.ராதாகிருஷ்ணன் இந்த அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார். புதிதாக அமைக்கப்பட்ட இந்த அருங்காட்சியகத்தில் இளைஞர்களுக்கு உணர்த்தும் வகையில், கலாமின் நினைவுப் பொருட்கள், அரிய புகைப்படங்கள், ஏவுகலங்களின் சிறிய வடிவ மாதிரிகள் போன்றவை இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
abdul kalam
Kalam Smriti International Museum
Kalam Smriti International Museum
Kalam Smriti International Museum
Kalam Smriti International Museum
Kalam Smriti International Museum
Kalam Smriti International Museum

A. P. J. Abdul Kalam அப்துல் கலாம்

ஆவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் (A. P. J Abdul Kalam, 15 அக்டோபர் 1931 – 27 சூலை 2015) பொதுவாக டாக்டர் ஏ. பி. ஜே. அப்துல் கலாம் என்று குறிப்பிடப்படுகிறார். இவர் இந்தியாவின், 11 ஆவது குடியரசு தலைவராக பணியாற்றிய இந்திய அறிவியலாளரும், நிர்வாகியும் ஆவார். இவர் தமிழ்நாட்டில் உள்ள இராமேஸ்வரம் என்ற இடத்தில் பிறந்து வளர்ந்தார். திருச்சிராப்பள்ளியில் உள்ள தூய வளனார் கல்லூரியில் இயற்பியலும் மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரியில் விண்வெளி பொறியியலும் படித்தார்.

கலாம், குடியரசுத் தலைவராக பதவி ஏற்பதற்குமுன், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திலும் (DRDO) இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திலும், (ISRO) விண்வெளி பொறியாளராக பணியாற்றினார். ஏவுகணை மற்றும் ஏவுகணை ஏவல் வாகன தொழில்நுட்ப வளர்ச்சியில் கலாமின் ஈடுபாட்டினால் அவர் இந்திய ஏவுகணை நாயகன் என்று பிரபலமாக அறியப்படுகிறார். 1974 ஆம் ஆண்டில் நடந்த முதல் அணு ஆயுத சோதனைக்கு பிறகு 1998 ஆம் ஆண்டில் நடந்த போக்ரான் – II அணு ஆயுத பரிசோதனையில் நிறுவன, தொழில்நுட்ப, மற்றும் அரசியல் ரீதியாக அவர் முக்கிய பங்காற்றினார். எனினும், சில அறிவியல் வல்லுனர்கள் கலாம் அணு இயற்பியலில் ஆளுமை இல்லாதவர் என்றும், ஹோமி ஜே பாபா மற்றும் விக்ரம் சாராபாய் அவர்களை பின்பற்றினார் என்றும் கூறினர்.

கலாம், இந்தியாவின் முக்கியக் கட்சிகளான இந்திய தேசிய காங்கிரசு மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவுடன், 2002 ஆம் ஆண்டில் லட்சுமி சாகலை தோற்கடித்து, இந்தியக் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் பாட்னா, அஸ்தினாபூரில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனங்களில் ஒரு வருகைப் பேராசிரியர் ஆகவும், திருவனந்தபுரத்தில் உள்ள இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் வேந்தர் ஆகவும், சென்னை அண்ணா மற்றும் ஜே எஸ் எஸ் மைசூர் பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் ஆகவும் பணியாற்றியதோடு, சோமாலியாவில் உள்ள பல கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் துணை/வருகைப் பேராசிரியர் ஆகவும் பணியாற்றினார்.

கலாம் தனது இந்தியா 2020 என்ற புத்தகத்தில் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற திட்டங்களை முன்மொழிந்துள்ளார். தென் கொரியாவில் அவருடைய புத்தகங்கள், மொழிபெயர்ப்புப் பிரதிகளாக மாற்றுவதற்காக பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. அவர் இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா உட்பட, பல மதிப்புமிக்க விருதுகளை பெற்றுள்ளார். கலாம் தனது ஊக்குவிக்கும் முறையிலான பேச்சுக்களாலும், இந்திய மாணவர் சமூகத்துடன் கலந்துரையாடல்களாலும் பெரிதும் அறியப்படுகிறார். அவர் 2011 ஆம் ஆண்டில் தேச இளைஞர்களுக்காக, இந்தியாவில் ஊழலை ஒழிப்பதை மையக் கருவாகக் கொண்டு, “நான் என்ன தர முடியும்” என்ற இயக்கத்தை ஆரம்பித்தார்.

About the author

admin

Leave a Comment