சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் மீண்டும் இணைகிறார் புரட்சி இயக்குநர் பா. ரஞ்சித் ( Pa Ranjith). இதையடுத்து அந்த நல்ல செய்தியைச் சொன்ன நடிகர் தனுஷின் டிவிட்டுக்கு ரீட்வீட் செய்து மகிழ்ச்சி என்று தனது டிரேட் மார்க் புன்னகையை பதிவு செய்துள்ளார் ரஞ்சித்.
I’m so proud and honoured to announce our production’s next film #WunderbarFilms pic.twitter.com/7T3tmy4Cre
— Dhanush (@dhanushkraja) August 29, 2016
ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான படம் ‘கபாலி’. தாணு தயாரிப்பில் வெளியான இப்படம் இந்தியளவில் பெரும் வசூல் சாதனை படைத்தது. இந்தி திரையுலகின் முன்னணி நடிகர்களின் படங்களின் சாதனையை வசூலில் முறியடித்தது.
ரஜினிகாந்த் என்ற நல்ல நடிகரை நாட்டு மக்களுக்கு மீண்டும் அடையாளம் காட்டிய பெருமைக்குரியவர் பா. ரஞ்சித். ரஜினியை வைத்து வித்தியாசமே இல்லாமல் இயக்கி வந்த இயக்குநர்களுக்கு மத்தியில், கபாலி மூலம் புதிய கோணத்தில் ரஜினியைக் காட்டிய சாதனையாளர். கபாலி பெரும் வரலாறு படைத்தது. தமிழ் சினிமாவின் புதிய சகாப்தமாக மாறி நிற்கிறது.
இந்த நிலையில் பா. ரஞ்சித்துடன் கை கோர்க்கிறார். மிகக் குறுகிய காலத்தில் ஒரு இயக்குநருடன் ரஜினி அவ்வளவு சீக்கிரம் இணைய மாட்டார். இந்த நிலையில் இளைய இயக்குநரான ரஞ்சித்துடன் தனது முதல் படத்தை முடித்த கையோடு அடுத்த படத்திலும் அவர் கை கோர்க்கவுள்ளது அனைவரையும் ஆச்சரியமடைய வைத்துள்ளது. அதேசமயம், கபாலி என்ற வித்தியாசமான கதைக் களத்தைத் தேர்ந்தெடுத்த ரஞ்சித், இந்த முறை ரஜினியை வைத்து என்ன மாஜிக் செய்யப் போகிறார் என்ற பெரும் எதிர்பார்ப்பும், ஆர்வமும் அதிகரித்துள்ளது.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘2.0’ உருவாகி வருகிறது. இப்படம் அடுத்தாண்டு தீபாவளிக்கு வெளிவரும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதனைத் தொடர்ந்து ரஜினி நடிக்கும் படத்தை இயக்கவிருக்கிறார் ரஞ்சித். இப்படத்தை தனுஷ் தயாரிக்க இருக்கிறார். இப்படம் ‘கபாலி 2’ ஆக இருக்கும் என தெரிவிக்கிறார்கள். ஆனால் தனுஷ் மற்றும் ரஞ்சித் இதனை உறுதிப்படுத்தவில்லை.
ஒன்று மட்டும் உறுதி.. நிச்சயம் இந்தப் படம் வரலாறு படைக்கும்..!