நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான நவராத்திரி ஸ்பெஷல் – பன்னீர் கீர் ரெசிபி எப்படி செய்வது? ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…
சுருக்கம் – பன்னீர் கீர் ரெசிபி வட இந்திய மக்கள் தங்கள் பண்டிகைகளின் போதும் சுப நிகழ்ச்சிகளின் போதும் இதை முக்கிய உணவாக செய்து மகிழ்வர். அதை செய்வதற்கான செய்முறைகள் மற்றும் வீடியோவின் தொகுப்பு.
பன்னீர் கீர் ரெசிபி எப்படி செய்வது எனத் தெரியுமா
பன்னீர் கீர் ரெசிபி வட இந்திய மக்கள் தங்கள் பண்டிகைகளின் போதும் சுப நிகழ்ச்சிகளின் போதும் இதை முக்கிய உணவாக செய்து மகிழ்வர். இது பன்னீர் பாயாசம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பாயாசத்தை பன்னீர், பால், கெட்டியான பால், நறுமணம் கமழும் ஏலக்காய் பொடி மற்றும் உலர்ந்த திராட்சை பழங்களை கொண்டு தயாரிப்பர்.
இந்த பன்னீர் கீர் சுப நிகழ்ச்சிகளின் ரெசிபியாக இருந்தாலும் விரதத்தின் போதும் இது மிகவும் சிறந்தது. கெட்டியான பாலின் இனிப்பு சுவையும், உலர்ந்த திராட்சையின் டேஸ்ட்டும் மற்றும் கொஞ்சம் உப்பு கலந்த பன்னீர் சுவையும்
இந்த பன்னீர் பாயாசத்தை விரைவாகவும் எந்த வித கஷ்டமும் இல்லாமல் எளிதாக செய்து விடலாம். இதை குளிராக சில்லென்று சாப்பிடவும் அருமையாக இருக்கும். இந்த ரெசிபியை நீங்கள் உங்கள் வீட்டில் செய்ய நினைக்கிறிங்களா சரி வாங்க இதை எப்படி செய்வது என்பதை வீடியோ மூலமும் மற்றும் செய்முறை விளக்க படத்துடனும் காணலாம்.
Recipe By: மீனா பந்தரி
Recipe Type: சுவீட்ஸ்
Serves: 2 பேர்கள்
துருவிய பன்னீர் – 1/2 கப்
சுண்டிய பால் – 3/4 கப்
பால் – 1/2 லிட்டர்
உலர்ந்த திராட்சை – 2-3 +அலங்கரிக்க
நறுக்கிய பாதாம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் பொடி – 1 டேபிள் ஸ்பூன்
1. அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் துருவிய பன்னீரை சேர்க்க வேண்டும்
2. உடனே பாலையும் அதனுடன் சேர்க்கவும்
3. 5-6 நிமிடங்கள் விடாமல் கிளறிக் கொண்டே கட்டியில்லாமல் பார்த்து கொள்ள வேண்டும்
4. இப்பொழுது சுண்டக் காய்ச்சிய கெட்டியான பாலை சேர்த்து 3-4 நிமிடங்கள் நன்றாக கிளறவும்.
5. ஏலக்காய் பொடி சேர்த்து நன்றாக கிளறவும்
6. இதனுடன் உலர்ந்த திராட்சை மற்றும் நறுக்கிய பாதாம் பருப்பை சேர்த்து கிளறவும்.
7. நன்றாக கிளறி அதை ஒரு பெளலில் மாற்றிக் கொள்ளவும்.
8. இப்பொழுது நறுக்கிய பாதாம் பருப்பு மற்றும் உலர்ந்த திராட்சைகளை அதன் மேல் தூவி அலங்கரிக்கவும்.
9. கொஞ்சம் குளிர விட்டு பரிமாறவும்.
இந்த பதிவின் மூலமாக நவராத்திரி ஸ்பெஷல் – பன்னீர் கீர் ரெசிபி எப்படி செய்வது? எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி நவராத்திரி ஸ்பெஷல் – பன்னீர் கீர் ரெசிபி எப்படி செய்வது? ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .