நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான காரசார சுவையுள்ள பன்னீர் கேப்ஸிகம் சப்ஜி செய்யும் முறை !! ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…
பன்னீர் கேப்ஸிகம் சப்ஜி வட இந்தியாவில் முக்கியமாக செய்யப்படும் கறி ஆகும். தினமும் செய்யும் ரெசிபியில் கண்டிப்பாக இது அதிகமான தடவையை இடம் பெற்று விடும். இந்த பன்னீர் கேப்ஸிகம் மசாலா காரசாரமான குடைமிளகாய் மற்றும் வெங்காயத்தை வதக்கி அப்படியே தக்காளி ஜூஸ் மசாலா சேர்த்து அதனுடன் சுவையான பன்னீர் துண்டுகளையும் சேர்த்து செய்யப்படும் ரெசிபி ஆகும்.
எந்த வீட்டை எடுத்தாலும் பன்னீர் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இந்த சுவையான நாக்கை சப்பு கொட்ட வைக்கும் பன்னீர் மசாலா குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும். கடாய் பன்னீர் சைவ பிரியர்களுக்கு மிகவும் பிடித்தமான டிஷ்ஷாக உலகம் முழுவதும் பரவியுள்ளது. மென்மையாக பன்னீருடன், மொறு மொறுப்பான குடைமிளகாய் மற்றும் வதக்கிய வெங்காயம் மற்றும் உங்கள் நாவில் எச்சு ஊற வைக்கும் தக்காளி காரசாரமான மசாலா இவற்றையெல்லாம் சேர்த்து பார்க்கும் போது உங்கள் கண்களுக்கு மட்டுமல்ல உங்கள் வயிற்றிற்கும் விருந்தளிக்கும். கடாய் பன்னீர் ரொட்டி, நாண் போன்றவற்றுடன் தொட்டு சாப்பிட சுவையானதாக இருக்கும்.
பன்னீர் கேப்ஸிகம் சப்ஜி ரெசிபியை வீட்டிலேயே எளிதாக விரைவிலேயே செய்ய முடியும். ரெம்ப பிஸியான நாட்களில் கூட இதை எளிதாக செய்து ஒரு அசத்து அசத்திடலாம். சப்ஜி கிரேவியுடன் அல்லது கிரேவி இல்லாமலும் செய்யலாம். சரி வாங்க இப்பொழுது ட்ரை பன்னீர் கேப்ஸிகம் சப்ஜி செய்வது எப்படி என்பதை வீடியோ மூலமும் மற்றும் செய்முறை விளக்க படத்துடனும் காணலாம்.
Recipe By: மீனா பந்தரி
Recipe Type: சைடிஸ்
Serves: 2 நபர்கள்
குடைமிளகாய் – 1
வெங்காயம் – 1
தக்காளி – 3
தண்ணீர் – 11/2 கப்
பூண்டு (தோலுரித்து) – 4 பல்
எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
சீரகம் – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
சிவப்பு மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
பன்னீர் துண்டுகள் – 1 கப்
கஸ்தூரி மெத்தி – 1 டேபிள் ஸ்பூன் +அலங்கரிக்க
1. பெரிய குடைமிளகாயை எடுத்து இரண்டு துண்டுகளாக வெட்டி கொள்ளவும்
2. உள்ளே உள்ள வெள்ளை பகுதிகளையும் விதைகளையும் நீக்கி விட வேண்டும்
3. ரெம்பவும் மெல்லிசாக இல்லாமல் 2 அங்குலம் அளவிற்கு நீளமான துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்
4. பிறகு பெரிய வெங்காயத்தை எடுத்து அதன் மேல் மற்றும் கீழ் பகுதிகளை நீக்கி விட வேண்டும்.
5. பிறகு அதன் தோலை உரித்து கடினமான மேல் பகுதியை நீக்கி விடவும்
6. பிறகு பாதியாக வெட்டி நீளமான துண்டுகளாக வெட்டி கொள்ளவும்
7. நன்றாக தனியாக உதிர்த்து விட்டு இன்னும் சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்
8. பிரஷ்ஷர் குக்கரில் தண்ணீர் சேர்க்க வேண்டும்
9. அதில் தக்காளியை போட்டு ஒரு விசில் வேக விடவும்
10. காற்று போன பிறகு மெதுவாக மூடியை திறக்க வேண்டும்
11. பிறகு வேக வைத்த தக்காளியை எடுத்து ஒரு தட்டில் வைத்து 15 நிமிடங்கள் ஆற வைக்க வேண்டும்
12. இப்பொழுது அதன் தோலை உரித்து விடவும்
13. தோலுரித்த தக்காளியை மிக்ஸியில் போடவும்
14. அதனுடன் பூண்டையும் சேர்த்து நன்றாக வழுவழுவென அரைத்து கொள்ளவும்
15. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்
16. அதில் சீரகம் போட்டு வெடிக்க விட வேண்டும்
17. வெட்டிய வெங்காயத்தை போட்டு 2-3 நிமிடங்கள் அதிகமான தீயில் பொன்னிறமாக வதக்க வேண்டும்
18. அதனுடன் நறுக்கிய குடை மிளகாயை சேர்த்து வதக்கவும்
19. 2 நிமிடங்கள் அப்படியே சமைக்க வேண்டும்
20. இப்பொழுது அரைத்த தக்காளி ஜூஸை அதில் ஊற்றவும். நன்றாக கலக்கவும்
21. ஒரு நிமிடம் வரை சமைக்க வேண்டும்
22. உப்பு, சிவப்பு மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கலக்கவும்
23. இப்பொழுது பன்னீர் துண்டுகளை சேர்க்க வேண்டும்
24. கஸ்தூரி மெத்தி சேர்த்து நன்றாக கிளறவும்
25. மூடியை கொண்டு மூடி ஒரு நிமிடம் வரை சமைக்க வேண்டும்
26. இது முடிந்த பிறகு ஒரு பெளலிற்கு கிரேவியை மாற்றி விடவும்
27. அதன் மேல் கஸ்தூரி மெத்தியை தூவி அலங்கரித்து பரிமாறவும்.
28. சூடாக பரிமாறவும்
இந்த பதிவின் மூலமாக காரசார சுவையுள்ள பன்னீர் கேப்ஸிகம் சப்ஜி செய்யும் முறை !! எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி காரசார சுவையுள்ள பன்னீர் கேப்ஸிகம் சப்ஜி செய்யும் முறை !! ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .