சைவம்

Soya kola urundai recipe சோயா கீமா கோலா உருண்டை

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான சோயா கீமா கோலா உருண்டை ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

மாலை வேளையில் மழைப் பெய்யும் போது சூடாகவும், மொறுமொறுப்பாகவும் ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டுமென்று ஆசையாக உள்ளதா? அதுவும் வித்தியாசமான ஸ்நாக்ஸ் செய்து சுவைக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் உங்கள் வீட்டில் மீல் மேக்கர் இருந்தால், அதைக் கொண்டு அற்புதமான ஒரு கோலா உருண்டை செய்து சுவையுங்கள். இது அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் அற்புதமாக இருக்கும்.

இப்போது சோயா கீமா கோலா உருண்டையை எப்படி செய்வதென்று காண்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

MOST READ: பிரெஞ்சு ப்ரைஸ்

தேவையான பொருட்கள்:

* மீல் மேக்கர் – 1 கப்

* வெங்காயம் – 3 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)

* பூண்டு – 2 டீஸ்பூன் (நறுக்கியது)

* கொத்தமல்லி – 1/2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

* அரிசி மாவு – 1 டேபிள் ஸ்பூன்

* பொட்டுக்கடலை மாவு – 2 டேபிள் ஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

மீல் மேக்கரை வேக வைப்பதற்கு…

* பால் – 2 டீஸ்பூன்

* தண்ணீர் – தேவையான அளவு

மீல் மேக்கருடன் அரைப்பதற்கு…

* சோம்பு – 3/4 டீஸ்பூன்

* பச்சை மிளகாய் – 1

* கசகசா – 3/4 டீஸ்பூன்

* பட்டை – 1/4 இன்ச்

* கிராம்பு – 1

செய்முறை:

* முதலில் பாத்திரத்தில் பால் மற்றும் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க ஆரம்பிக்கும் போது, அதில் மீல் மேக்கரைப் போட்டு 3-5 நிமிடம் வேக வைத்து இறக்கி, 15 நிமிடம் அப்படியே ஊற வைத்து, நீரை முற்றிலும் வடிகட்டிவிட்டு, குளிர்ந்த நீரில் இரண்டு முறை அலசிக் கொள்ளவும்.

* பின் மீல் மேக்கரில் உள்ள நீரை கையால் பிழிந்து கொள்ளவும்.

* பின்பு மிக்ஸி ஜாரில் மீல் மேக்கரைப் போட்டு, அத்துடன் சோம்பு, பச்சை மிளகாய், கசகசா, பட்டை, கிராம்பு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பிறகு அதை ஒரு பௌலில் போட்டு, அத்துடன் பொட்டுக்கடலை மாவு, அரிசி மாவு, வெங்காயம், பூண்டு, கொத்தமல்லி மற்றும் உப்பு சேர்த்து மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும்.

* பின் அதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.

* இறுதியில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி நன்கு சூடானதும், தீயை குறைத்துவிட்டு, உருட்டிய உருண்டைகளை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான சோயா கீமா கோலா உருண்டை தயார்.

IMAGE COURTESY

இந்த பதிவின் மூலமாக சோயா கீமா கோலா உருண்டை எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி சோயா கீமா கோலா உருண்டை ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

About the author

admin

Leave a Comment