நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான தேங்காய் அல்வா ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…
அல்வா என்றதுமே நமக்கு நினைவிற்கு வருவது திருநெல்வேலி இருட்டுக் கடை அல்வா தான். ஆனால் அல்வாவில் நிறைய வெரைட்டிகள் உள்ளன. அதில் ஒன்று தான் தேங்காய் அல்வா. உங்கள் வீட்டில் உள்ளோருக்கு மாலை வேளையில் ஒரு இனிப்பு பலகாரம் செய்து கொடுக்க விரும்பினால், அதற்கு தேங்காய் அல்வா சரியான தேர்வாக இருக்கும். மேலும் தேங்காய் அல்வா குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் சுவையானதாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
* நற்பதமான துருவிய தேங்காய் – 1 கப்
* கொதிக்க வைத்து குளிர வைத்த பால் – 1 1/4 கப்
* சர்க்கரை – 4 டேபிள் ஸ்பூன்
* முந்திரி – 1 டேபிள் ஸ்பூன்
* நெய் – 2 1/2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், முந்திரியை சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
* பின் துருவிய தேங்காயைப் போட்டு பொன்னிறமாவ வதக்கவும்.
* அதன் பிறகு கொதிக்க வைத்து குளிர வைத்த பாலை ஊற்றி குறைவான தீயில் கொதிக்க வைக்கவும்.
* பாலானது சுண்டி நீரின்றி போகும் நிலையில் சர்க்கரையை சேர்த்து தொடர்ந்து கிளறி விடவும். கலவையானது கெட்டியாகும் வரை கிளறிக் கொண்டே இருங்கள்.
* பின்பு அதில் 1 டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து மீண்டும் கிளறும் போது, அல்வா போன்று எதிலும் ஒட்டாமல் வரும். அப்போது முந்திரி மற்றும் எஞ்சிய நெய்யையும் சேர்த்து கிளறி இறக்கினால், தேங்காய் அல்வா தயார்.
குறிப்பு:
* மற்ற அல்வாக்களைப் போல் இந்த அல்வாவிற்கு அதிக நெய் தேவைப்படாது. மேலே குறிப்பிட்டுள்ளதை விட குறைவாக 2 டேபிள் ஸ்பூன் மட்டும் பயன்படுத்தினாலே போதும்.
* தேங்காயை துருவ முடியாவிட்டாலும் பரவாயில்லை. தேங்காயை துண்டுகளாக்கி மிக்ஸியில் போட்டு அரைத்தும் பயன்படுத்தலாம்.
* நற்பதமான தேங்காயை மட்டும் பயன்படுத்துங்கள்.
* ஒரு சிட்டிகை உப்பு சேர்த்துக் கொண்டால், சுவை இன்னும் அற்புதமாக இருக்கும்.
*
IMAGE COURTESY
இந்த பதிவின் மூலமாக தேங்காய் அல்வா எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி தேங்காய் அல்வா ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .