சைவம்

Paneer Bhurji Gravy Recipe In Tamil | ருசியான… பன்னீர் புர்ஜி கிரேவி

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான ருசியான… பன்னீர் புர்ஜி கிரேவி ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி அல்லது பூரி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? இதற்கு வித்தியாசமான சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் அதற்கு பன்னீர் புர்ஜி கிரேவி சரியானதாக இருக்கும். இது செய்வது மிகவும் ஈஸி மற்றும் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் மிகவும் சுவையானதாகவும் இருக்கும்.
அப்படியானால் கீழே பன்னீர் புர்ஜி கிரேவி ரெசிபியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து, உங்கள் வீட்டில் உள்ளோரை ஆச்சரியப்படுத்துங்கள். அதோடு உங்கள் அனுபவத்தையும் எங்களுடன் மறவாமல் பகிர்ந்து கொள்ளுங்கள்.

MOST READ: ஹோட்டல் ஸ்டைல் சன்னா குருமா

தேவையான பொருட்கள்:

* பன்னீர் – 1 கப் (துருவியது)

* பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

* தக்காளி – 2 (நறுக்கியது)

* பச்சை மிளகாய் – 1 (பொடியாக நறுக்கியது)

* இஞ்சி – 1/2 இன்ச் (பொடியாக நறுக்கியது)

* காய்ந்த வெந்தய கீரை – 1 டீஸ்பூன்

* கொத்தமல்லி – 1 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)

* உப்பு – சுவைக்கேற்ப

* தண்ணீர் – தேவையான அளவு

தாளிப்பதற்கு…

* வெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

* சீரகம் – 2 டீஸ்பூன்

* பட்டை – 1/4 இன்ச்

* கிராம்பு – 1

* பிரியாணி இலை – 1

மசாலா பொடிகள்…

* மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

* மல்லித் தூள் – 1/2 டீஸ்பூன்

* மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

* கரம் மசாலா – 3/4 டீஸ்பூன்

* சீரக பொடி – 1/2 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் பன்னீரை உதிர்த்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் சேர்த்து உருகியதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்கவும்.

* பின்பு அதில் துருவிய இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து 1 நிமிடம் வதக்க வேண்டும்.

* பிறகு வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கி, அதைத் தொடர்ந்து தக்காளியையும் சேர்த்து நன்கு மென்மையாக வதக்கிக் கொள்ள வேண்டும்.

* அதன் பின் மசாலா பொடிகள் மற்றும் உப்பு சேர்த்து கிளறி, 2 நிமிடம் வேக வைத்து, பின் கிரேவிக்கு தேவையான நீரை ஊற்றி, 5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.

* அடுத்து உதிர்த்து வைத்துள்ள பன்னீரை சேர்த்து சில நிமிடங்கள் கெட்டியாகும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.

* இறுதியில் கொத்தமல்லி மற்றும் உலர்ந்த வெந்தய கீரையை மேலே தூவி இறக்கினால், சுவையான பன்னீர் புர்ஜி கிரேவி தயார்.

* இது சப்பாத்தி, புல்கா, பூரி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.

IMAGE COURTESY

இந்த பதிவின் மூலமாக ருசியான… பன்னீர் புர்ஜி கிரேவி எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி ருசியான… பன்னீர் புர்ஜி கிரேவி ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

About the author

admin

Leave a Comment