நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான ஆந்திரா ஸ்டைல் சேனைக்கிழங்கு வறுவல் ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…
கிழங்குகளில் சேனைக்கிழங்கு உடலுக்கு உடனடி ஆற்றலைத் தரக்கூடிய வேர் காய்கறி. இந்த சேனைக்கிழங்கை வறுவல் செய்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும். அதுவும்
தேவையான பொருட்கள்:
* சேனைக்கிழங்கு – 250 கிராம் (சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்)
* கடுகு – 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை – சிறிது
* பச்சை மிளகாய் – 1
* இஞ்சி – 1 இன்ச்
* பூண்டு – 4 பற்கள்
* மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் – 2 டேபிள் ஸ்பூன்
* மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்
* உப்பு – சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் சேனைக்கிழங்கை குக்கரில் போட்டு, அதில் ஒரு கப் நீர் மற்றும் சிறிது உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கிக் கொள்ளவும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து நீரை வடிகட்டிக் கொள்ளவும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
* பின் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, வேக வைத்துள்ள சேனைக்கிழங்கை சேர்த்து கிளறி, மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி விடவும்.
* சேனைக்கிழங்குடன் மசாலா அனைத்தும் ஒன்றுசேரும் வரை நன்கு கிளறி விட்டு இறக்கினால், ஆந்திரா ஸ்டைல் சேனைக்கிழங்கு வறுவல் தயார்.
Image Courtesy: archanaskitchen
இந்த பதிவின் மூலமாக ஆந்திரா ஸ்டைல் சேனைக்கிழங்கு வறுவல் எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி ஆந்திரா ஸ்டைல் சேனைக்கிழங்கு வறுவல் ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .